தமிழ்நாடு: பிஏசிஎல் இணையத்தளத்தில் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டை (Password) மாற்றிக் கொள்ளும் வசதியை தற்போது செபி மறுபடியும் வழங்கியுள்ளது. செபி இணையதளத்தை முடக்கிய பிறகு புதிதாக கொடுக்கும் தகவல் இது.
பிஏசிஎல் வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெறுவதற்காக செபி ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் மக்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கூறியது.
மேலும் படிக்க: இன்று நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?
அதில் ஒரு ஒரு பாலிசிதாரர்களுக்கு தனி பாலிசி நம்பர் தனி கடவுச்சொல் அதாவது (பாஸ்வேர்ட்) உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த பாஸ்வேர்டையும் பாலிசி என்னை வைத்து தான் அவர்களுடைய பாலிசி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
பதிவின்பொது உருவாக்கும் அந்த பாஸ்வேர்டை பாலிசிதாரர்கள் மறந்துவிட்டால் அதை மாற்றம் செய்து புதுப்பிக்கும் வாய்ப்பு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வாய்ப்பு செபி மீண்டும் தனது இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
உங்களுடைய பிஎசிஎல் PACL பதிவிற்கான பாஸ்வேர்ட் மறந்து விட்டால் உங்களின் பிஏசிஎல் பாலிசி என்னையும், நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பரையும் உள்ளிட்டால் உங்களுக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் உங்களுடைய பாஸ்வேர்டை புதுப்பிக்க முடியும்.
மேலும் படிக்க: 13 வகையான PACL பிரச்சனை நோடல் ஆபீசரிடம் புகார் – நீங்கள் செய்தீர்களா?
இதனால் உங்கள் ஆவணத்தை சரிபார்க்கவும், மேலும் விவரங்களை அறிய உதவியாக இருக்கும். செபி சமீபத்தில் இணையதளத்தை முடக்க இருந்தாலும், வேலை நடந்து கொண்டிருப்பது விரைவில் இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் முக்கிய அம்சமாக தற்போது பாஸ்வேர்டு மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் உங்களுடைய முக்கிய பாஸ்வேர்டை மாற்றம் செய்ய முடியும். ஒரு வேலை நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மறந்து இருந்தால் மட்டுமே மாற்றம் செய்தால் போதும். இல்லையெனில் நீங்கள் மாற்றம் செய்யத் தேவையில்லை.
மாற்றம் செய்ய அவசியமாக உங்களுடைய பிஎசிஎல் பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் தேவைப்படும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் (OTP) மட்டுமே உங்கள் பாஸ்வேர்ட் மாற்ற உதவும். உங்கள் பாஸ்வேர்டை மாற்றம் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
அனைவருக்கும் உதவியாக இருக்க இந்த தகவலை பகிருங்கள். செபி இணையதளத்தை முடக்கிய பிறகு புதிதாக கொடுக்கும் தகவல் இது. அனைவருக்கும் பயனாக அமைய நிச்சயம் இதை பகிருங்கள்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.