PACL: மையங்கள் திறந்து பணம் வழங்க வேண்டும் சென்னை செபி அலுவலக போராட்டம்

சென்னை: பிஏசிஎல் பணத்தை மக்களுக்கு விரைவாக வழங்க கோரி சென்னை செபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது 02/12/2020 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள செபி அலுவலகம் முன்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை செபி அலுவலகம் முன்பு நடத்தப்படும் இந்தப் போராட்டமானது இரண்டாவது போராட்டமாகும். இதற்கு முன்னர் செபி அலுவலகம் முன்பு பிஏசிஎல் களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

PACL tamilnadu
PACL tamilnadu

ஆனால் அந்த போராட்டத்தின்போது அதிக அளவு மக்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வைத்தனர். பின்னர் இந்த போராட்டத்தின் முடிவில் பிஏசிஎல் சொத்துக்களை மக்களுக்கு கொடுக்க பொறுப்பேற்றிருக்கும் லோதா கமிட்டி சந்திக்க சென்னை செபி அலுவலகம் பரிந்துரை செய்து. அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தது.

அந்த போராட்டத்தை நடத்திய ஒருங்கிணைந்த போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் “லோதா கமிட்டி” சந்தித்து குறைகளை தெரிவித்தனர். பின்னர் தற்போது வரை செபி அலுவலகத்தின் முன்பு எந்த ஒரு போராட்டமும் நடத்தப்படவில்லை.

மேலும் படிக்க: நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?

PACL NEWS TODAY
PACL NEWS TODAY

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பின்படி வரும் 02/12/2020 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போராட்டத்தின்போது வைக்கப்படும் கோரிக்கைகளை பற்றியும் அந்த போராட்ட குழுவானது தெளிவாக குறிப்பிடுகிறது.

அதாவது, நீதியரசர் லோதா கமிட்டி அவர்கள் பிஏசிஎல் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் மோசடி கும்பலிடம் இருந்து நிலங்களை மீட்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது, PACL நிலங்களை விற்று பணத்தை உடனடியாக முதலீட்டாளர்களுக்கு தரவும் வலியுறுத்தப்படுகிறது.

SEBI PACL NEWS TODAY
SEBI PACL NEWS TODAY

மேலும், அதிகத் தொகை இருக்கும் “அக்னாலேஜ்மென்ட்” பணத்தை மக்களுக்கு வழங்கவும் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க அவர்களுக்கு மண்டல அளவில் மையங்கள் திறந்து மறுபடியும் பணத்திற்காக பதிவு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 thought on “PACL: மையங்கள் திறந்து பணம் வழங்க வேண்டும் சென்னை செபி அலுவலக போராட்டம்”

  1. sir i need guidance about pacl refund process and news..any whats app group or facebook page available?? please add me,,my mother is a agent and facing lot of trouble from policy members…please help

    Reply

Leave a Comment