PACL: ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டு முடக்கப்பட்ட பாஸ்வேர்ட் பாஸ்வேர்டு பகுதி மீண்டும் சிபியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உங்களுடைய பழைய பாஸ்வேர்டை புதுப்பிக்க முடியும்.
செபி தரப்பில் புதிய தகவல்கள் வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சிபியின் இணையத்தளமானது வேலைகள் நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிபி அறிவித்திருக்கிறது. இருந்தபோதும் இடையில் பாஸ்வேர்ட் ஆப்ஷனை வழங்கியது சிபி.
மேலும் அறிய: 2021-ஆம் ஆண்டுக்கான செபியின் முதல் PACL அறிவிப்பு
சமீபத்தில் அதை முடக்கி விட்டது மீண்டும் தற்போது அதை திறந்துள்ளது. பிஏசிஎல் பணம் செலுத்திய களப்பணியாளர்கள் மற்றும் மக்கள் அனைவருமே சிபியின் இணையதள ஒவ்வொரு அசைவையும் உற்று கவனித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆகையால் சிபி இணையதளம் விரைவில் திறக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் அனைத்து பணம் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்ற உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் அறிய: ஜனவரி 1-ம் தேதி முதல் நாம் செய்யவேண்டிய முக்கியமான PACL வேலை
மேலும் சிபியின் நடவடிக்கையில் பலரும் திருப்தி இல்லாமல் பல இடங்களில் சிபிக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். PACL சம்பந்தப்பட்ட மக்கள் அனைவருமே சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தங்கள் பணத்திற்காக காத்திருக்கின்றனர். வடமாநிலங்களிலும் பல பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கிறது.
இருந்தபோதிலும் சிபி கடந்த இரண்டு வருடமாக மக்களுக்கு பணத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரின் குற்றச்சாட்டு என்னவென்றால் குறைந்த அளவு தொகை வழங்கி கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதிக தொகை எப்போது வழங்கப்படும் என்ற ஒரு பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்கள் விற்றால் மட்டுமே பணம் மக்களுக்கு சென்றடையும் என்பது கருத்தாக இருந்தாலும், ஒருபுறம் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சொத்துக்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் புகார் எழுந்து வருகிறது. இதற்கு இடையில் சிபி மற்றும் லோதா கமிட்டி எவ்வாறு இந்த பிரச்சனையை முடிக்கும் என்று அனைவரும் மனதில் சந்தேகம் எழும்பிக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: 13 வகையான PACL பிரச்சனை நோடல் ஆபீசரிடம் புகார் – நீங்கள் செய்தீர்களா?
இருந்தபோதிலும் சிபி தனது வேலையை ஒருபுறம் செய்து கொண்டுதான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கும் சூழ்நிலை மட்டுமே தற்போது PACL சம்பந்தப்பட்டவர்களின் நிலையாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
விரைவில் சிபி அறிவித்தது போல் இணையதளத்தை புதுப்பித்து அதிக தொகை உள்ளவர்களுக்கான வேலையை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.