தமிழ்நாடு: டிசம்பர் 16-ஆம் தேதியன்று செபி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை PACL-லில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தால் 10,000 ரூபாய் தொகை உள்ளவர்கள் தங்கள் தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் தற்போது ஜனவரி-1 2021 முதல் மார்ச்-31 2021 தேதி வரை இந்த வாய்ப்பு செபி இணையதளத்தில் வழங்கப்படும்.
இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்:
அனைவருமே தங்கள் (PACL) ஆவணங்களை செபியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு செபி அறிவுறுத்தியது. அப்போது அந்த அறிவுறுத்தலின்படி, ஒரிஜினல் ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் அனைவருமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
இருப்பினும் அதில் நிறைய நபர்கள் பணம் செலுத்திய சில ஆவணங்களை தவற விட்டதால் கையில் இருந்த ஆவணங்களை மட்டும் பதிவு செய்தனர்.
அப்படியிருக்க ஒரு சிலருக்கு பெயர் மாற்றம், ஊர்மாற்றம், வங்கிக் காசோலையில் பெயர் மாற்றம் இதுபோன்ற சிக்கல்கள் இருந்தன. இருப்பினும் கால தாமதம் ஆகிவிடும் என்று பதிவேற்றம் செய்ய நேரிட்டது.
அதேசமயம் சிபியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது பதிவேற்றம் செய்யும் ஆவணங்களில் அளவு அதாவது பெரிதாக இருக்க கூடாது என்பதற்காக கருப்பு-வெள்ளை புகைப்படங்களாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
அந்த சூழ்நிலையில் புகைப்படம் சரியாக தெரியாத காரணத்தினாலும் மறுமுறை அதை ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய கூறியது செபி இது 5000 பிறகு 7000 போன்ற தொடைகளில் தொடங்கி தற்போது 10,000 வரை பணம் செலுத்தியவர்கள் தங்கள் தவறுகளை திருத்த வாய்ப்பு வழங்குவதாக கூறி இருக்கிறது.
இதற்கு முன்னர் தங்கள் தவறுகளை திருத்தி மறுபதிவு செய்து அவர்களுக்கான பணமும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆகையால் இந்த முறை நீங்கள் தவறுகளை திருத்தி பதிவு செய்தால் நிச்சயம் உங்கள் பணமும் விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதே சமயம் நீங்கள் செபியின் இணையதளத்தில் பதிவு செய்யும் போது உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு நீங்கள் ஆய்வு செய்யும்போது, ஒருவேளை உங்கள் பதிவில் தவறு இருந்தால் உங்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பு அந்த பகுதியில் வழங்கப்படும். அப்போது அந்த காலத்துக்குள் நீங்கள் உங்கள் தவறுகளை திருத்தி பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: இன்று நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?
மேலும் உங்களுடைய கடவுச்சொல் மறந்து போனால், அதை புதுப்பிக்கவும் செபி இணையதளத்தை வழங்கியுள்ளது. உங்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி உங்களுடைய கடவுச்சொல்லை (பச்ச்வோர்ட்) மறுபடியும் மாற்றி அமைக்க முடியும். அது போன்று மாற்றி அமைத்து அதில் தவறுகள் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுதல் நல்லது. அதேசமயம் பிஎசிஎல் வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பகிர்வது நல்லதாக இருக்கும்.
மேலும், பத்தாயிரம் பணம் செலுத்தியவர்களுக்கு அதற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் படிக்க: இணையதளத்தை முடக்கிய பிறகு புதிதாக வந்த முதல் வாய்ப்பு
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.