PACL: பிஏசிஎல் பணத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்தவர்களில் 10,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்பவர்கள் மற்றும் 10,000 ரூபாய் செலுத்தி அவர்களுக்கான விண்ணப்பத்தை திருத்துவதற்கான வாய்ப்பை செபி வழங்கியுள்ளது.
இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் உங்கள் தகவலை சரிபார்த்து அதில் தவறு இருப்பின் அதைத் திருத்திக் கொள்ள முடியும்.
அதை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ளுங்கள், அதை நீங்களே எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்:
Step 1: முதலில் செபி இணையதளத்தை திறந்து (ENQUIRY) என்பதை தொடுங்கள்.
Step 2: பிறகு நீங்கள் திருத்த நினைக்கும் PACL நம்பரையும் மற்றும் அதிலுள்ள (Captcha) எழுத்துக்களும் உள்ளிடுங்கள்.
Step 3: ஒருவேளை உங்கள் பதிவில் தவறுகள் இருந்தால் திருத்தம்செய்ய செபி ஒரு வாய்ப்பை வழங்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்த (Edit Application) என்ற பதிவை தொடுங்கள்.
Step 4: பிறகு உங்கள் PACL பதிவின்போது உருவாக்கிய கடவுச்சொல் (Password) மற்றும் உங்கள் பாலிசி நம்பரையும் உள்ளிடுங்கள்.
ஒருவேளை உங்கள் கடவுச்சொல் (Password) மறந்திருந்தால் இதனை தொடுங்கள்.
Step 5: சரியான PACL நம்பரையும் பாஸ்வேர்டயும் உள்ளிட்டபிறகு நீங்கள் திருத்தும் செய்யக்கூடிய பகுதி வரும். அதனை சரியாக படித்துப்பாருங்கள்.
பின்பு அதில் என்ன தவறு குறிப்பிட்டுள்ளதோ அதனை சரிசெய்ய தேவையான ஆவணங்களை தயாராக வய்துகொள்ளுங்கள்.
Step 6: உங்கள் தகவல் அணையத்தையும் செபி வழிகாட்டுதலின்படி சரியாக மறுபதிவுசெய்தபிறகு, அதாவது பதிவேற்றம் செய்தபிறகு (final submit) பகுதியை தொடுங்கள்.
பின்குறிப்பு:
தற்போது வரை நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்ற கேள்விகளுக்கு தவறான பதில் தந்தவர்களுக்கு திருத்தும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
வங்கிக் புத்தகத்தில் பெயர் மாற்றம், பதிவேற்றம் செய்த ஆவணங்கள் (எழுத்துக்கள்) சரியாக தெரியவில்லை என்பது போல இருக்கும் பிரச்சனைகளுக்காக அந்த ஆவணங்களை புகைப்படம் எடுத்து மறுபதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு நீங்கள் மறுமுறை பதிவேற்றம் செய்யும் ஆவணம் ஆனது உதாரணமாக 300கேபி-க்குள் இருக்க வேண்டும். அதாவது ஒரு புகைப்படத்தின் அளவு பெரிதாக இருந்தால் அதை சிறிதாக மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதோடு, நீங்களே செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்துங்கள்.
PACL ஆவணங்களை எப்படி 300-K: PACL ஆவணங்களை எப்படி 300-KB க்குள் மாற்றுவது மற்றும் பதிவேற்றுவது?
PACL Refund Edit Option Full Tutorial In Tamil
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.