PACL ஆவணங்களை எப்படி 300-KB க்குள் மாற்றுவது மற்றும் பதிவேற்றுவது?

PACL TAMIL: PACL-லில் செலுத்திய பணத்தை பெறுவதற்காக சிபியின் இணையதளத்தில் (PACL) ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

அதேநேரம் பதிவேற்றம் செய்த ஆவணங்களில் தவறுகள் இருந்தாலும் அதையும் மறு பதிவேற்றம் செய்வது மிக முக்கியமாகும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது உங்களுடைய ஆவணத்தின் அளவு அதாவது 300-KB க்குள் இருக்க வேண்டும்.

300-KB க்குள் உங்களுடைய ஆவணம் இல்லை என்றால், அதாவது அதனின் அளவு பெரிதாக இருந்தால் உங்களுடைய ஆவணம் செபி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாது.

ஆகையால், எவ்வாறு உங்களது பிஏசிஎல் ஆவணம் மற்றும் வங்கி புத்தகம், பேன்கார்டு போன்றவற்றின் அளவை 300-KB க்குள் உருவாக்குவது.

அதுவும் உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தி நீங்களே எப்படி செய்வது என்பதை பற்றிதான் இதில் தெளிவாக பார்க்க போகிறோம்.

Step 1: இதற்கென்று பல இணையதளங்கள் இருந்தாலும், இந்த இணையத்தளம் மிகவும் நல்ல பயன்தரும் தலமாகும்.

புகைப்படத்தின் அளவு குறைந்தாலும் அதன் மதிப்பு குறையாமல் இருக்கும். இந்த தளத்தை முதலில் திறந்துகொள்ளுங்கள். compressimage.toolur.com

compress pacl image 300kb image
compress pacl image 300kb image

Step 2: பின்னர் உங்கள் PACL ஆவணங்கலின் அளவை குறைக்க இதில் பதிவேற்றுங்கள். பதிவேற்றம் செய்ய கிழே உள்ள புகைப்படத்தை பின்பற்றுங்கள். (Upload Image)

compress pacl bond edit 300kb image
pacl bond edit 300kb image

Step 3: புகைப்படமானது பதிவேற்றம் அடைந்தபிறகு (Image quality) என்ற இடத்தில 90 இருக்கும் அதை 40 வைத்தால் போதுமானது. பின்னர் கிழே உள்ள (Compress Image) என்ற பட்டனை தொடுங்கள்.

pacl bond edit option
pacl bond edit option

Step 4: இறுதியாக உங்கள் ஆவணத்தின் அளவானது எவ்வளவு குறைந்துள்ளது என்பதை நீங்கள் கிழே பார்க்கமுடியும்.

அதேநேரம் அது எந்த அளவு தெளிவாக உள்ளதா மற்றும் செபி குறிப்பிட்ட அளவில் உள்ளதா என்பதை சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 (Compress Image) at the pacl bond
(Compress Image) at the pacl bond

உங்கள் பிஏசிஎல் தவறுகளை திருத்துவதற்கான ஆவணங்கள் அனைத்தையும் சரியான அளவில் மாற்றிய பிறகு, நீங்களே உங்கள் பிஏசிஎல் பதிவேற்றம் செய்வதற்கு கீழே உள்ள வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.

பிஏசிஎல் தவறுகளை திருத்த: உங்கள் PACL தவறுகளை எப்படி திருத்துவது? நீங்களே எப்படி செய்வது கற்றுக்கொள்ளுங்கள்

Leave a Comment