மாண்புமிகு, தமிழக முதல்வர் அவர்களுக்கு CM CELL
Strat Your complaint
ஐயா வணக்கம்!
ஜெய்பூரை தலையிடமாகக் கொண்ட PACL நிதி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் சுமார் 5.75 கோடி மக்கள் பணத்தை செலுத்தி, தற்போது திரும்ப கிடைக்கப்பெற முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முகவர் முதல், முதலீட்டாளர் வரை 7, வருடங்களாக, மனதளவில் பாதிக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு இடைேயே வாழ்ந்து(?) வருகிறோம்,
பலமுறை, பலவகைகளில் மத்திய,மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எங்கள் குறையை காதுகொடுத்து கேட்கவோ எங்கள் கண்ணீரை துடைக்கவோ யாரும் முன்வரவில்லை,
இந்நிறுவனத்தின் சொத்துக்கள் பெரும்பாலும் நிலங்களாக தமிழ்நாட்டில் உள்ளது. அதனை விற்று விரைவில், “PACL முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்து, ஏழை எளிய மக்களின் ஏழு ஆண்டுகால துயரத்தை, போக்கிடவும் எங்கள் வாழ்வில் உங்கள் நல்லாட்சியின் வழியாக விடியல் காணச் செய்ய வேண்டுமென்று,பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
(தேர்தல் பரப்புரையின்போது மனுவாக தங்கள் கவனத்திற்கு வழங்கி இருக்கிறோம், மதிப்பிற்குரிய, கனிமொழி எம்.பி அவர்களும், நமது கழக ஆட்சி வந்தவுடன், இதற்கான வழிவகை செய்யப்படும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்கள்)
இவண்:
——– மாவட்ட,PACLமுதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள்.
——–மாவட்டம்
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
ஐயா வணக்கம் நான் பிஏசிஎல் நிறுவனத்தில்2009 ம் வருடம் முதலீடு செய்திருந்தேன் ஏஜெண்ட் என்று சேர சொல்லி 20 பேரிடம் முதலீடு செய்ய வைத்தேன்.என்னைப்போல்லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கிறோம் அந்த நிறுவனம் தற்போது செயல்படவில்லை.அதன் சொத்துக்கள் தமிழகத்தில் நிறைய இருந்தும் அதன் சொத்துக்களை விற்று எங்களுக்கு பணம் கிடைக்க வழி செய்யவேண்டி கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏
சீக்கிரம் பணம் கிடைக்க வழி செய்ங்க ஐயா
ஐயா வணக்கம் நான் பிஏசிஎல் நிறுவனத்தில் 2009 ம் வருடம் முதலீடு செய்திருந்தேன் ஏஜெண்ட் என்று சேர சொல்லி 10 பேரிடம் முதலீடு செய்ய வைத்தேன். என்னைப் போல் லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கிறோம். அந்த நிறுவனம் தற்போது செயல்படவில்லை. அதன் சொத்துக்கள் தமிழகத்தில் நிறைய இருந்தும் அதன் சொத்துக்களை விற்று எங்களுக்கு பணம் கிடைக்க வழி செய்யவேண்டி கேட்டு கொள்கிறேன். நன்றி
Kavalai vendam, nallathe nadakkum!