PACL அவசர செய்தி

பிஏசிஎல் நிறுவனம் சொத்துக்கள்லின் பட்டியல் தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள் முன் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன் பிறகு நிறைய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. பிஏசிஎல் நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தை முதல் இடமாகக் கொண்டு இந்தியா முழுக்க கிளைகள் திறந்து இயங்கிவந்தது.

சதுப்பு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவது போன்ற காரியங்களை முன்னெடுத்து இந்த நிறுவனம் இயங்கி வந்த நிலையில், நிறைய இடங்களில் அதாவது நிறைய மாநிலங்களில் இந்த நிறுவனத்திற்கு சம்பந்தமான சொத்துக்கள் இருந்தது.

அதோடு, புதிதாகவும் சொத்துக்கள் வாங்கப்பட்டு வந்தது, இந்த விவகாரத்தில் பலர் முறைகேடாக போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை விற்றது தெரியவந்துள்ளது.

PACL சம்பந்தப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வதாக கடந்த சில மாதங்களாகவே புகார்கள் இருந்து வந்த நிலையில், பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவர்களின் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அந்த வகையில் அவர்கள் கையகப்படுத்தப்பட்ட PACL நிலங்களின் சர்வே எண்கள் அனைத்தும் மாநிலங்கள் முழுக்க சார்பதிவாளர் அலுவலகங்களில் முன் பலகையில் பட்டியலிடப்பட்டு.

இதன்பிறகு நிறைய நபர்கள் தங்களுடைய நிலம் தங்களுக்கே தெரியாமல் விற்பனை செய்ய வந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் பிஏசிஎல் நிறுவனம் இதுபோன்று செய்ததா அல்லது இடைத்தரகர்கள் இதுபோன்ற செய்தனர் என்று அனைத்து விவசாயிகளும் இது சம்பந்தமாக புகார் அளித்து கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் பெரும்பாலும் சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு தங்களுக்கு பரிந்துரைக்கப்படும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், பிஏசிஎல் நிறுவனத்தின் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் தங்கள் முதிர்வுதொகை காலம் முடிந்தும் இன்னும் பணத்தை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை அனைத்தையும் விரைவாக முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க இருக்கும் அனைத்து பிஏசிஎல் களப்பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் இதுபோன்ற நிலங்களை தங்களுக்கே தெரியாமல் இருந்த அவர்கள் என அனைவருமே அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

1 thought on “PACL அவசர செய்தி”

  1. Sir small amount deposited get their money but those who finished their complete installment and waiting to get their matured money still waiting.The government first come first serve basis those who paid got matured give on their date basis but those who paid and we are waiting till our end?

    Reply

Leave a Comment