மாநிலத்தில் 31 நிறுவனங்கள் ஏமாற்றப்பட்ட 1.5 லட்ச்சம் மக்கள் பணம் திருப்பிக் கொடுக்கும் அரசாங்கம் – சத்தீஸ்கர்

தமிழ்நாடு: பிஏசிஎல் நிறுவனத்தின் பணம் செலுத்திய அனைத்து மக்களுக்கும் ஒரு முக்கியமான தகவலை இதில் பார்க்கப் போகிறோம். ஆம் நான் கூறுவது போலவே மிக முக்கியமான தகவல் தான்.

நானும் பி ஏ.சி.எல் இல் வேலை செய்த நிறைய பணத்தை இழந்த ஒருவன் தான், ஆறு மாதத்திற்கு முன்னதாக ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டேன். அந்த செய்தியில் இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் என்ற மாநிலத்தில், இது போன்ற நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமார்ந்த மக்களின் பணத்தை அந்த மாநில அரசாங்கமே திருப்பி தருவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

Pமேலும் படிக்க: 8 முதலாலில்கள் கொண்ட நிறுவனம் மொத்த சொத்துக்களையும் வாங்க தயார்

pacl new today 
pacl new today

அதைப்போலவே தற்போது அந்த அறிக்கையை நிறைவேற்றியிருக்கிறது. சுமார் 31 நிறுவனங்களில் பல விதமான பண பரிமாற்றத்தில் ஏமாற்றப்பட்ட மக்களின் பணத்தை, தற்போது அந்த மாநிலம் திருப்பி தர முடிவு எடுத்திருக்கிறது.

மேலும் படிக்க: PACL Tamilnadu Telegram Group Link

சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையைதர முடிவு எடுத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் சுமார் 31 நிறுவனங்கள் சேர்த்து மக்களின் பணத்தை ஏமாற்றியது. அந்த நிறுவனங்கள் தற்போது சரியாக வேலை செய்யவில்லை, சிபியால் முடக்கப்பட்டது, பணத்தை ஏமாற்றியது இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டது.

அந்த நிறுவனங்களின் சொத்துகளை அனைத்தையும் கையகப்படுத்தி, மாநிலத்தில் இருக்கும் சொத்துக்களை விற்று, அந்த மாநிலத்தில் உள்ள ஏமாந்த மக்கள் பணத்தை திருப்பித்தந்து கொண்டிருக்கிறது.

அந்த மாநில அரசுக்கு அங்கே சாத்தியம் என்றால், தமிழகத்திலும் சாத்தியமாக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் PACL சம்பந்தப்பட்ட சொத்துகள் தமிழகத்தில் மக்களின் தேவைக்கு அதிகமாக இருக்கிறது.

மேலும் படிக்க: PACL Refund Contact Number In Tamil – பதில் கிடைக்க போகிறது

சிபி தரப்பில் ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் நமது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய சொல்லி, அந்த ஆவணங்களில் இருக்கும் தொகையை தருகிறார்களோ அதேபோலவே ஆறு மாதத்திற்கு முன்னதாகவே சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏமாந்த மக்களின் அனைத்து ஆவணங்களையும் அம்மாநில அரசு ஒன்று திரட்டியது.

Complaint PACL
paclcomplaint

தற்போது அதற்கென்று ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக அந்த 31 நிறுவனங்களில் இருக்கும் சொத்துக்களை விற்று மக்கள் பணத்தை திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை நாம் இப்போது பேச காரணம் என்னவென்றால்? தற்போது தமிழகத்திலும் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. நேரம் நெருங்குகிறது யாரை தொடர்பு கொண்டால் இதன் சரியான நமக்கு கிடைக்கும் என்பதை கணிக்க PACL-லில் வேலை செய்த மூத்த ஏஜெண்டுகள் முன்வர வேண்டும்.

அவர்கள் முன் வந்து சரியான நபரை தொடர்பு கொண்டு இது பற்றி பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு முழுக்க இருக்கின்றார்கள். இவர்கள் பணம் கிடைக்க வழிசெய்தல் நிச்சயம் எங்கள் வாக்கு உங்களுக்கு கிடைக்கும் என்று கூறலாம். ஒரு உதாரணத்திற்கு சொல்லுகிறேன்.

மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?

அப்படி கூறமுடியும் காரணம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்சி சார்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே பாமர ஏழை மக்கள் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆகையால் இந்த நேரத்தில் நாம் இதை செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இது சாத்தியம் என்றால், தமிழகத்திலும் இது சாத்தியம் காரணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நிறுவனங்கள் ஏமாற்றப்பட்டு அந்த நிலங்களை விற்று மக்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் PACL சொத்துக்களை மட்டும் விற்றாலே போதும் மக்களின் தேவையை விட அதிகமான பணம் கிடைக்கும். இதை செய்ய அந்த மாநிலத்தில் முடிகிறது என்றால் தமிழகத்திலும் முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது.

மேலும் படிக்க: PACL: 5000, 7000, 10000 ஆயிரம் போன்ற தொகைகளை மட்டுமே – வாய்ப்பு

தமிழக அரசு தமிழக முதல்வர் சற்று மக்களின் வேதனையை புரிந்து கொண்டு இதை முன்னெடுத்துச் செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உங்களால் முடிந்த அளவு அனைவருக்கும் பகிருங்கள்.

Leave a Comment