சிபி (டெபாஸிட்) தொகை தருகிறது!! – PACL Refund Status In Tamil

PACL  (டெபாசிட்)

பிஏசிஎல் நிறுவனத்தில் செலுத்திய (டெபாஸிட்) தொகை தற்போது வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடமாநிலத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு வரவு வைக்கப்பட்ட தகவலாகும். தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வு நடந்ததாக யாரும் பதிவிடவில்லை.

இருந்தபோதிலும், அவர் பிஏசிஎல் பணம் செலுத்தி தான் பெற்றிருக்கிறார் என்பது உண்மை.

ஆகையால் தற்போது 10 ஆயிரம் வரை சிபி பிஏசிஎல் பணத்தை திரும்ப கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஒரு முறை செலுத்தி

இதில் குறிப்பாக, மாத தவணை கட்டியவர்களுக்கு பணத்தை திரும்பத் தரும் போது அவர்கள் பாதியில் நிறுத்தியவர் ஆக இருப்பார்கள்.

இல்லை எனில் கம்பெனி மூடியதால் சூழ்நிலை காரணமாக தங்கள் பாலிசி நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.

ஆனால் இந்த (டெபாசிட்) என்பது ஒரு முறை செலுத்தி, காலக்கெடு வைத்து பின்னர் பணத்தை வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளும் முறையாகும்.

இதற்கு நிறுவனமானது வட்டி தரவேண்டிய சூழ்நிலை கட்டாயமாக்கப் படுகிறது.

வட்டி

ஆனால் இந்த நிறுவனமோ சிபியாள் முடக்கப்பட்ட நிறுவனம். ஆகையால் இதனிடம் வட்டியை எதிர்பார்க்க முடியுமா முடியாதா? என்ற பெரிய கேள்வியானது இந்தியா முழுக்க பணம் செலுத்திய மக்கள் மனதில் இருக்கிறது.

இருப்பினும் தற்போது 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் பணம் பெற்ற அந்த குறிப்பிட்ட நபருக்கு, அவர் கட்டிய தொகை மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மேலும் அதிக தொகை இருக்கும் நபர்களுக்கும் கட்டிய பணம் மட்டும்தான் கிடைக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.

ஓரளவு வட்டி

சிபி மக்கள் பணத்தை தருவதற்கு சொத்துக்களை விற்றால் மட்டுமே முடியும். சொத்துக்கள் ஒருவேளை அதிக அளவு விற்க்குமேயானால், ஓரளவு வட்டி கொடுக்கலாம் என்ற ஒரு கணக்கையும் சிபி போட்டு வைத்து இருக்கலாம்.

அதாவது பெரிய தொகைகளை வழங்கும்போது சிபியின் கைகளில் அதிக பணம் இருக்குமேயானால், வட்டி தர வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

PACL ஒரிஜினல் ஆவணங்களை கையில் இருப்பவர்களுக்குத்தான் பணம் என்பது தற்போது குறிப்பாக கூறப்படும் ஒரு கருத்து ஆகும்.

அட்டவணைக்கு கீழ்

இதன் காரணமாக தற்போது சிபி பணம் கொடுத்திருக்கும் இந்த முறையில்10 ஆயிரத்திற்கு அதிகமான தொகை வழங்கும்போது, தங்கள் டெபாசிட் அமௌண்ட் ஆக இருந்தாலும்…

அல்லது மாதத்தவணை செலுத்திய அமௌன்ட் ஆக இருந்தாலும், சிபியின் அட்டவணைக்கு கீழ்வருமாறு இருந்தால் அவர்களின் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.

எனவே உங்கள் ஒரிஜினல் ஆவணங்களை பணம் பெறும் வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

 5 லட்சம் 10 லட்சம்

வருங்காலத்தில் 5 லட்சம் 10 லட்சம் என்று டெபாசிட் செய்தவர்களுக்கும் கிடைக்குமா அல்லது தங்கள் செலுத்திய பணம் மட்டும் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் சிபிஇடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் இந்த நிறுவனம் பற்றி தெரிந்தவர்கள் அதிகம் கூறுவது:

சொத்துக்கள் அதிக அளவிற்கு விற்றால் வட்டி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மக்களுக்கு தேவையான அளவிற்கு, அதாவது மக்களுக்கு தரவேண்டிய பணம் அளவிற்கு சொத்துக்கள் நிறுவனத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “சிபி (டெபாஸிட்) தொகை தருகிறது!! – PACL Refund Status In Tamil”

Leave a Comment