SEBI PACL Refund Online Registration 2020 – Check Status In Tamil

SEBI PACL Refund Online Registration 2020 In Tamil

பிஏசிஎல் என்ற நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க பணத்தை செலுத்தினர்
அவர்களுடைய பணம் தற்போது திருப்பி அளிக்க கூடிய பொறுப்பு சிபியிடம் உள்ளது
இதில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால் மட்டுமே முழு தொகை திரும்ப பெறப்படும் என்ற வகையில், ஒரு இணையதளம் செய்தது இதில் தற்போது பலவிதமான குழப்பங்கள் குளறுபடிகள் உள்ளது.
ஒரு தரப்பில் அனைத்து ஆவணங்களையும் செலுத்தினாலும் சரி பணம் வரவில்லை என்ற குற்றச்சாட்டும்
நாங்கள் பணம் செலுத்திய முழு தகவல் உங்களிடமிருந்தும் ஐந்து வருடங்கள் தாமதம் செய்து, ஆவணங்களை கேட்பது சரியா மக்கள் எவ்வாறு அதை வைத்திருக்க முடியும்

pacl refund online tamil

எனவே குற்றச்சாட்டு அதிகம் எழுகிறது, மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் 8000 வரை மட்டுமே பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
மேலும் இரண்டு லட்சம் 3 லட்சம் என்று பணம் செலுத்தியவர்கள் நிலைமை எப்போது மாறும், அவர்களுடைய பணம் அவர் சாகும் முன்னர் கிடைக்குமா என்ற பலவிதமான கேள்விகள் பதில் சொல்ல முடியாத வகையில்
இவை அனைத்தையும் தமிழக மக்கள் மட்டுமல்லாமல். வடமாநிலங்களிலும் நிறைய மக்கள் இந்த நிலையைத்தான் எதிர்கொள்கின்றனர்
குற்றச்சாட்டு என்னவென்றால் இந்த நவீன யுகத்தில் அனைத்துமே சுலபமாக நடத்திவிட முடியும்
பணம் கட்டிய தகவல்கள் அனைத்தும் சிபியின் கையில் இருக்கும் போது ஒரு பாலிசிதாரரின் என்னை கொடுத்தால் போதுமே, அவர்கள் கட்டிய தொகை அனைத்தும் தெரியவரும்
அப்படி இருக்க, எதற்காக அனைத்து ஆவணங்களையும் கேட்கிறீர்கள் இது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா
www.sebi.gov.in

pacl refund status in tamil

அனைவரிடமும் ஆவணங்கள் இருப்பது சாத்தியமா? சிபி ஐந்து வருடங்கள் தாமதித்த பிறகு இதை கேட்பது சரியா என்று சரமாரி கேள்விகள் சிபியின் மீது எழுந்த வண்ணம் உள்ளது
இதில் ஏதாவது தவறு செய்து விட்டாலோ அல்லது குழப்பங்கள் ஏற்பட்டு அல்லது சந்தேகங்களுக்கு யாரை தொடர்பு கொண்டு கேள்வி கேட்பது என்ற கேள்விக்கும் பதில் கிடையாது
சிபியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டாலும், சிபினிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்ற பதிலே மக்களுக்கு அன்றாடம் கிடைத்துக் கொண்டிருக்கிறது
இதில் பணம் செலுத்தி இறந்துவிட்டனர், வயதானவர்கள் பேன் கார்டு எடுக்க முடியாது, இன்னும் நிறைய பெண்கள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்றது அவர்களுடைய விலாசம் மாறிவிட்டது, நிறைய பெயர்கள் கம்பெனி கொடுத்த வங்கி காசோலையை மட்டுமே கையில் வைத்திருக்கின்றன, அதற்கான பதில்கள் எதுவுமே தெளிவாக கிடைக்கப்பெறவில்லை./div>

 www.sebi.gov.in pacl in tamil

சொத்துக்கள் விற்க வேண்டும் அவைதான் பணம் தர முடியும் என்று கூறும் சிபி, சொத்துக்களை விற்பதற்கு சரியான எந்த ஒரு வழியையும் மேற்கொள்ளவில்லை என்பதை மக்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது
தற்போது உள்ள நவீன யுகத்தில், அரசாங்கத்தின் உதவியோடு பல தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த சொத்துக்களை விற்று மக்களுக்கு எளிதாக பணத்தை கொடுத்து விட முடியும்.
இருந்தாலும் இதை தாமதிப்பது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும்புகிறது, தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி வேலைகளில் தாமதம் அடைவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினால்…
ஏற்கனவே பதிவு செய்த ஆவணங்களை சரிபார்த்து அவைகளுக்கு நல்ல பதிலை அளிக்க கூடாதா என்ற கேள்வியும் மக்கள் முன் எழும்புகிறது.
மக்களுக்கு தரவேண்டிய பணத்திற்கு தேவையான சொத்துக்கள் இருக்கிறது என்று கூறும் சிபியானது, அரசாங்கத்தின் மூலமோ அல்லது தனியார் நிறுவனத்தின் மூலமாக இந்த சொத்துக்களை விற்று மக்கள் பணத்தை தந்தால்….

pacl latest news tamil 2020

பணம் செலுத்திய மக்கள் உயிரோடு இருக்கும்போதே அதை வாங்கி அனுபவிக்க முடியும், இறந்த பின்பு அந்தப் பணம் எதற்கு என்று ஒரு வேண்டுகோள்தான் மக்கள் மத்தியில் எழுகிறது
இதற்கு தமிழக அரசு மட்டும் இல்லாமல், இந்தியாவே சற்று கவனித்து இந்த பிரச்சனையை சரி செய்தாள் நன்றாக இருக்கும் என்று பிஏசிஎல் பணம் செலுத்திய மக்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்களின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது.

6 thoughts on “SEBI PACL Refund Online Registration 2020 – Check Status In Tamil”

  1. Wonderful website you have here but I was wondering if you knew of any forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of group where I can get feed-back from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Thank you! ยูฟ่าเบท168

    Reply

Leave a Comment