PACL விஷயத்தில் ஒரு முக்கியமான செய்தி, அதாவது PACL நிறுவனத்துக்கு சொந்தமான இணையதளம் ஒன்று இருந்து வந்தது. அது https://www.auctionpacl.com/ என்ற பெயரில் இயங்க பட்டு வந்தது.
அதில் பிஏசிஎல் மக்கள் பணத்தில் வாங்கிய சொத்து விபரங்கள் அனைத்துமே இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த தளத்தை சிபி முற்றிலும் தன் வசப்படுத்தி இருக்கிறது.
இதில் தற்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தளத்தில் pacl வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல், பிஏசிஎல் நிலங்களை வாங்க மற்றும் நினைப்பவர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் நிறைய மாற்றங்களை உருவாக்கி உள்ளது.
மேலும் படிக்க: PACL: 5000, 7000, 10000 ஆயிரம் போன்ற தொகைகளை மட்டுமே – வாய்ப்பு
உதாரணமாக அதில் கொடுக்கப்பட்டுள்ள (View property) இடத்தில் என்ற ஆப்ஷனை நீங்கள் தொடர்பு கொள்ளும் போது, உங்களுக்கு அதில் மொபைல் நம்பர் பெயர் கேட்கப்படும்.
அப்போது நீங்கள் அருகிலுள்ள பிஏசிஎல் சம்பந்தப்பட்ட இடங்களை தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இருக்கும் பிஏசிஎல் நிலங்களின் பட்டியலையும் பார்வையிட முடியும்.
இதில் முக்கியமாக கருதப்படுவது என்னவென்றால், நமது அருகில் உள்ள இடங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதில் ஏதேனும் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்பதையும் நம்மால் உணர முடியும்.
மேலும் படிக்க: மாநிலத்தில் 31 நிறுவனங்கள் ஏமாற்றப்பட்ட 1.5 லட்ச்சம் மக்கள் பணம் திருப்பிக் கொடுக்கும் அரசாங்கம் – சத்தீஸ்கர்
சிபி இந்த விஷயத்தில் இது போன்று நிறைய மாற்றங்களை கொண்டு வரும் காரணத்தை பார்க்கும்போது, விரைவில் சொத்துக்கள் விற்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதாவது அனைவரும் இந்த தகவல்களை கொண்டு சேர்த்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். பெரிய நிறுவனங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை ஆராய முடியும், இந்த இணைய தளத்தை தொடர்புகொண்டு சொத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.