இந்தியா: PACL நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களுக்கான அறிவிப்பு ஏதாவது வெளியாகும் என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தற்போது பிஏசிஎல் பதிவின் போது கொடுத்த கடவுச்சொல்லை மறந்து இருந்தால் (Password) அதை மாற்றி அமைக்க மட்டுமே வாய்ப்பு சிபி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முக்கிய பங்கு அளிக்கக் கூடிய பல விஷயங்கள் செபியின் இணையதளத்தில் திறக்கப்படாமல் இருக்கின்றது. இதற்கு செபி தரப்பில் கூறப்படும் காரணம் இன்னும் சில தினங்களில் இணையதளம் மக்களின் பயன்பாட்டிற்காக வரும் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதில் வழங்கப்படும் என்று.
இது ஒருபுறம் இருந்தாலும் மக்களின் கவனமும், கேள்வியும் அதிகம் என்னவென்றால் பணத்தை விரைவாக பெறுவதற்கு என்ன வழி? என்பது மட்டுமே.
இதற்காக ஒரு சிறந்த வழி இருக்கிறது! அதாவது சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஏசிஎல் மட்டுமல்லாமல் ஏமாற்றப்பட்ட அனைத்து மக்களுக்காக பணம் சத்தீஸ்கர் மாநிலம் திருப்பிக் கொடுத்தது.
இந்த சூழலில் தற்போது இதை முன்னுதாரணமாக வைத்து தமிழ்நாட்டிலும் இதை அமல்படுத்த முடியும். அதாவது தற்போது அரசியல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்து இருக்கிறது.
மேலும் படிக்க: நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது என்றவர்கள்
இதை ஒரு ஊன்றுகோலாக வைத்து அரசியல் தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் நிலைமையை எடுத்துக் கூறினால், நிச்சயம் அவர்கள் வாக்குறுதி அளித்தால் இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கும் பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் பிரச்சனையை நிச்சயம் தீர்க்க உதவியாக இருக்கும்.
காரணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அது சாத்தியம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஏன் சாத்தியமாக இருக்காது. பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருக்கின்றது. அதை தமிழ்நாடு அரசு விற்று மக்களுக்கு கொடுத்தால், வட்டியோடு பணத்தை திருப்பி வழங்க முடியும்.
மேலும் படிக்க: அதிக பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சத்தீஸ்கர் மாநிலம் எவ்வாறு அதை சாத்தியப்படுத்தியது அதே பாதையில் சென்று தமிழ்நாட்டிலும் இதை சாத்தியப்படுத்த முடியும். இதற்கு அரசியல் தலைவர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது சரியான ஒரு தீர்வு என்பதை விட, இது ஒரு சரியான தருணம் என்பதே முக்கிய விஷயம்.
பிஏசிஎல் இல் அதிக நாள் உழைத்த சீனியர்கள் முயற்சி செய்தால் அவர்களுக்கு உறுதுணையாக பலரும் திரண்டு வருவார்கள். இதற்கு உதாரணம் சென்னை செபி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தும் போது அனைவருமே ஒன்று திரண்டனர். அதேபோல் இந்த முயற்சியில் நிச்சயம் அனைவரும் ஒன்று திரள்வார்கள் என்று ஆணித்தரமாகக் கூற முடியும்.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் புகார் – நீங்கள் செய்தீர்களா?
அரசியல் கருத்து வேறுபாடு இல்லாமல் பொது முயற்சியாக இந்த விஷயத்தை கையில் எடுத்தால் நிச்சயம் பலனளிக்கும் என்பது பிஏசிஎல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கொண்டிருக்கும் பல பலரின் கருத்தாக இருக்கிறது.
செபி நிச்சயம் பணத்தை திருப்பித் தரும், ஆனால் காலதாமதமின்றி விரைவில் பெறுவதற்கு இது போன்ற முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டியது அவசியம் ஆகையால் இதை அனைவருக்கும் பகிருங்கள்.
இதை பற்றி உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இல்லை என்றாலும் இதை பிஏசிஎல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பகிர்ந்தால் ஏதாவது ஒரு நல்லது நடக்கும்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
Cialis Cs