PACL நிறுவனத்தில் அதிக பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு: PACL என்ற நிறுவனத்தில் இந்தியா முழுக்க 5 கோடிக்கும் அதிகமான மக்கள் முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிறுவனமானது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிபி மூலமாக முடக்கப்பட்டது.

பின்னர் இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் கையகப்படுத்தி ஏலம் விட முடிவுகள் எடுக்கப்பட்டது. ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை வைத்து 5 கோடி மக்களின் முதலீட்டு தொகையை திரும்ப தர முடியும் என்பதை கருத்தில் கொண்டு, சுப்ரீம்கோர்ட் ஏலம் விட ஆணையிட்டது.

மேலும் படிக்க: PACL: பதிவில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்றவர்கள்

PACL acknowlagement
PACL

மேலும் படிக்க: நீங்கள் செய்தீர்களா?13 வகையான PACL பிரச்சனைக்கு நோடல் ஆபீசரிடம் புகார்

ஏலம் விட தனி கமிட்டியும் நிர்ணயித்தது சுப்ரீம் கோர்ட். அந்த கமிட்டி ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் சிபியின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.

இப்போது 10 ஆயிரம் வரை முதலீடு செய்த மக்களுக்கு மட்டுமே அவர்களது தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பணம் செலுத்திய அனைவருடைய ஆவணங்களையும் சிபி இணையதளம் மூலம் பெற்றுவிட்டது. சில ஆவணங்கள் தவிர.

இதில் குழப்பம் என்னவென்றால், எவ்வளவு செய்திகள் பார்த்தாலும் பணம் அதிகம் செலுத்திய மக்களின் கவனம் நமது பணம் எப்போது கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

PACL acknowlagement
PACL Money

மேலும் படிக்க: ஒன்றிணையங்கள் – PACL Tamilnadu Telegram Group Link

காரணம் தற்போது 5,000 ஒரு முறை பணம் வந்ததாக தகவல் வந்தது, பின்னர் 7,000 வந்ததாகவும் தகவல் வந்தது, அதன் பிறகு 10,000 வந்ததாக தகவல் வந்தது. இருப்பினும் நமது பணம் லட்சக் கணக்கில் உள்ளது, ஆகையால் எப்போது நமக்கு கிடைக்கும் என்று கேள்வி அவர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் விடை என்னவென்றால் சிபி இணையதளத்தில் மட்டுமே இது சம்பந்தமான தகவல்கள் வெளியிடப்படும். அதை மட்டுமே உறுதியாக நம்பவும் மக்களுக்கு சிபி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் மக்கள் குழம்புவதற்கு நிறைய காரணம் இருக்கிறது.

முக்கிய காரணம் மொழிப்பிரச்சினை. இந்த நிறுவனம் வடமாநிலத்தில் பஞ்சாப்பை மூலதனமாக வைத்து துவங்கப்பட்டது. பிற மாநிலங்களில் முதலீடு செய்திருந்தாலும் அவர்களுக்கு இந்தி தெரிந்த காரணத்தினால் சுலபமாக பிஏசிஎல் பணம் வருவது சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

PACL login
PACL login

மேலும் படிக்க: சிபி (டெபாஸிட்) தொகை தருகிறது!! – PACL Refund Status In Tamil

ஆனால் தமிழகத்தில் இது சற்று வேறுபாடாக இருக்கிறது. காரணம் ஹிந்தி மூலம் தெரிவிக்கப்படும் தகவல்கள் தமிழ் முதலீட்டாளர்களுக்கு வந்தடைய வெகு நாட்கள் ஆகின்றது. இதன் காரணமாகவே நிறைய நபர்கள் சிபியின் இணையதளத்தில் தங்களது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.

இது போன்ற நிறைய குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் தற்போது காத்திருக்க வேண்டிய ஒரே நிலையை மட்டுமே இருக்கிறது. காரணம் உங்களுடைய தொகை அதிகமாக இருப்பின் நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பு தாமதமாக வரக்கூடும்.

சொத்துக்கள் அனைத்தும் ஒரே முறையில் விற்க வாய்ப்புகள் குறைவு. காரணம் இவை அனைத்தும் 40 ஆயிரம் கோடிக்கும் மேல், 50 ஆயிரம் கோடியை நெருங்கும் அளவு இருக்கிறது.

எந்த நிறுவனம் சொத்துக்களை ஏலம் கேட்டாலும், மூன்று அல்லது நான்கு தவணையாகவே கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகின்றனர். இந்த சூழலில் நிச்சயம் முதல் தவணை வரும்போது குறிப்பிட்ட தொகை செலுத்திய நபர்களுக்கு பணத்தை சிபி வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். இரண்டாவது தொகை பெறும்போது போது, அடுத்து குறிப்பிட்ட தொகையை செலுத்திய வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்.

PACL Bond
PACL Bond

மேலும் படிக்க: PACL பணம்: விண்ணப்பங்களை திருத்த கடைசி தேதி – சிபி அறிவிப்பு

இந்த குறிப்பிட்ட அளவு தொகை எதை கொண்டு கணிக்கப்படும் என்றால், ஏலம் கேட்கும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை கொண்டு கணிக்கப்படும். எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்குள் பிஏசிஎல் பணமானது அணைத்து மக்களுக்கும் சென்றடைந்து விடும் என்ற கருத்து கணிப்பு கூறுகிறது.

ஆகையால் பணம் செலுத்திய மக்கள் அனைவருமே சிபியின் தகவலுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஒன்று இப்போது இருக்கிறது. தற்போது உள்ள தகவல் என்னவென்றால் 7,000 உள்ளவர்கள் மட்டுமே, தங்கள் பதிவு தவறுகளை திருத்த முடியும் என்ற சூழல் நிலவிவருகிறது.

PACL தகவல் அனைத்துமே சிபியின் வாயிலாகவே வெளியிடப்படும். அதுவரை உங்கள் ஆவணங்களை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்றும் சிபி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment