PACL: பதிவில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்றவர்கள்

தமிழ்நாடு: பிஏசிஎல் ஆவணப் பதிவு செய்யும்போது நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்று பதிலளித்தவர்களுக்கான தொகையை சிபி வங்கிக் கணக்கில் செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போதைக்கு இதனை திருத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.

pacl land is allotted in the record,
pacl land is allotted in the record,

மேலும் படிக்க: PACL: மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி

அதாவது பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிபி ஒரு இணையதளத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. அந்த இணையதளத்தில் ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு சரியான தகவல் கிடைக்காததால், நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது.

முதலில் ஆவணங்களை கலர் ஜெராக்ஸ் அனுப்புங்கள் என்றனர், பின்பு வெள்ளை கருப்பு போன்று அனுப்ப உத்தரவிட்டனர். இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். எந்த விதத்தில் அப்லோட் செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்தது.

இது போன்ற சூழலில், பதிவு செய்யும்போது ஒரு சில தவறுகள் நடக்க நேரிட்டது, அதில் முக்கியமானது நிலம் ஒதுக்கப்பட்டதா, இல்லையா என்பது. பொதுவாக பணம் செலுத்திய ஆவணத்தில் பார்க்கும்போது எந்த ஒரு வாடிக்கையாளரின் ஆவணத்திலும் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் உண்மை என்னவென்றால் அது நிறுவனத்தின் ஒரு வகையான உத்தரவாதம் மட்டுமே. ஆனால் உண்மையில் நிலம் ஒதுக்கி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு அதற்கென்று தனி ஆவணம் ஒன்று பிஏசிஎல் நிறுவனம் இருந்து கொடுக்கப்படும்.

pacl land is allotted yes or no
pacl land is allotted yes or no

மேலும் படிக்க: PACL Refund Contact Number In Tamil – பதில் கிடைக்க போகிறது

ஆனால் அந்த ஆவணம் நூற்றில் பத்து நபர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கும். அந்த பத்து நபர்கள் மட்டுமே நில ஒதுக்கீடு என்ற இடத்தில் ஒதுக்கப்பட்டது (ஆம்) என்று கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் நிறைய நபர்கள் பிஏசிஎல் ஆவணத்தில் நில (அளவு) கொடுக்கப்பட்டதை பார்த்து, தவறுதலாக புரிந்து கொண்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கொடுத்துவிட்டனர். இதன் காரணமாக நிலம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு எவ்வாறு நாம் பணம் கொடுப்பது என்பது பற்றிய விஷயங்களில் காரணமாக சிபி தற்போது அவர்களின் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வில்லை.

இதனால் சிபி தற்போது நிறைய நபர்களுக்கு வங்கிக் கணக்கில்பணம் வரவு வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதில் மக்கள் தவறு என்றும் சொல்ல முடியாது. நிறைய நெட் சென்டர்களிலும் இந்த தவறுகள் நடந்தது.

இதற்கெல்லாம் சரியான காரணம் தேடுவதை விட, தற்போது இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர உபாயம் தேடுவதே சரியானதாக இருக்கும். தற்போது 7,000 வரை உள்ளவர்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பு சிபி வழங்குகிறது.அதுவும் அக்டோம்பர் 31 வரை என்று தெரிவித்திருக்கிறது.

pacl land is allotted yes or no sebi
pacl land is allotted yes or no sebi

மேலும் படிக்க: (டெபாஸிட்) தொகை தருகிறது சிபி!!

இருப்பினும் இந்த வாய்ப்பானது வங்கிக் கணக்கு எண், பெயர் மாற்றம் போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் நில ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விஷயத்தை திருத்தம் வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களை குழப்பமடைய தேவையில்லை.

இதுவரைக்கும் இதுபோன்ற விஷயங்களில் சிபி இடம் புகார் அளித்து மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான் செபியிடம் புகார் அளிப்பது மட்டுமே.

ஏனென்றால் இதுபோன்ற தவறுதலாக நில ஒதுக்கீடு உள்ளது என்று குறிப்பிட்டது 7000 வரை இருப்பவர்கள் மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த பாலிசிதாரர்கள் அனைத்து பேரிலும் கிட்டத்தட்ட 10 லிருந்து 15 சதவீதம் நபர்கள் இதுபோன்ற தவறுகளை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பார்க்கப்போனால் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணம் அதிகமாகும் போது, அதாவது தற்போது பத்தாயிரம் வரை கொடுக்கப்படும் இந்த பணமானது வருங்காலத்தில் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வறை கொடுக்க நேரிட்டாலும், அப்போதும் தவறுதலாக பதிவு செய்தவர்கள் காணப்படுவர். அவர்களுக்கும் திருத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

pacl land is allotted yes or no
pacl land is allotted yes or no

மேலும் படிக்க: PACL: 8 முதலாலில்கள் கொண்ட நிறுவனம் மொத்த சொத்துக்களையும் வாங்க தயார்

இதில் இருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் காலதாமதம் மட்டுமே. குறுகிய காலத்தில் பணம் மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க படலாம். ஆனால் இதுபோன்ற தவறுகளால் அந்த கால அவகாசம் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே தற்போது வரை நிலம் உள்ளது என்று தவறு இழைத்தஅவர்களுக்கான திருத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து வடமாநிலத்தில் சிபியின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு எடுத்திருக்கிறார்.

விரைவில் சிபி இதற்கு ஒரு நல்ல உபாயம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு இணையதளத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நிச்சயமாக மக்களுக்கு உதவியாக அமையும். உங்களின் மேலான கருத்துக்களை சிபியிடம் இடம் மற்றும் நோடல் ஆபீஸர் இடம் தெரிவியுங்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி.

Complaint PACL
PACL complaint

Leave a Comment