PACL பற்றி இப்போதே முதல்வரிடம் சொல்லுங்கள்

Chief ministers special cell: இந்தியாவில் ஜெய்பூரை தலையிடமாகக் கொண்ட PACL நிதி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சுமார் 5.75 கோடி மக்கள் பணத்தை செலுத்தி, தற்போது திரும்ப கிடைக்கப்பெற முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதில் தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் புகார் பதிவுசெய்வது அவசியம்.

இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி, உரிய சமயத்தில் நிலுவைத் தொகையை பெற முடியாத அனைவரும் உங்கள் புகாரை முதல்வருக்கு அனுப்புவதன் மூலம், மிக விரைவாக அந்த பணத்தை உங்களால் பெற முடியும்.

அதை எவ்வாறு நீங்கள் எளியமுறையில் செய்வது என்பது பற்றியும், நீங்கள் புகார் அளிக்கும் போது எவ்வாறு எழுத வேண்டும் என்பதைப் பற்றியும் தற்போது தெளிவாக பார்ப்போம்.

இதை அனைவரும் செய்வது மிக மிக அவசியம் ஆகும். ஒவ்வொரு பிஎசிஎல் வாடிக்கையாளர் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் இது முக்கிய தருணம்.

step 1

முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் Feedback என்ற ஒரு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

online petition filing and monitiorning system

step 2

இப்போது நீங்கள் புதிதாக புகார் அளிக்க வந்தவர், ஆகையால் இந்த பகுதியில் உள்ள New User என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கான ஒரு அக்கௌன்ட் உருவாக்க முடியும்.

online petition filing and monitiorning system in tamilnadu

step 3

அடுத்து உங்களுடைய சுயவிவரங்கள் அனைத்தையும் பதிவு செய்வது மிக அவசியம். உதாரணமாக உங்கள் கைபேசி எண், மாவட்டம் போன்றவற்றை உள்ளிட்ட பிறகு, கீழே Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.

online petition filing and monitiorning system in tamil

step 4

அதன்பிறகு உங்களுக்கான ஒரு அக்கௌன்ட் துவக்கப்பட்டு இருக்கும், அதற்கான கடவுச்சொல் உங்களுக்கு கிடைக்கும்.

அதாவது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் உங்கள் முன் தோன்றும், அதனை நீங்கள் பத்திரமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளுவது அவசியம்.

chief minister's special cell

step 5

உங்கள் பணியானது இப்போது 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை துவங்கி விட்டீர்கள். உங்களுடைய கணக்கில் உள் நுழைவதற்காக மேலே உள்ள லோகின் (login) பட்டனை அழுத்துங்கள்.

chief ministers special cell

step 6

சரி வாருங்கள் உங்களுடைய கணக்கில் சென்று புகார் அளிக்க தொடங்கலாம். உங்களுக்கு என கொடுக்கப்பட்ட யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான நம்பரையும் பதிவிட்டு login பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் கணக்கை நீங்கள் அடைவீர்கள்.

chief ministers special cell in tamil

step 7

மேலே உள்ள ஃபீட்பேக் (feedback)என்பதை அழுத்தினால் புகார் அளிப்பதற்கான முக்கிய பகுதி, அதாவது நாம் இவ்வளவு நேரம் காத்திருந்த அந்த பகுதி உங்கள் முன் திறக்கும், அதில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

chief ministers special cell

step 8

இப்போது நீங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றீர்கள். அதாவது நீங்கள் படும் துயரங்களை அனைத்தையும் பதிவு செய்யும் ஒரு முக்கியமான இடம் இதுவாகும்.

இந்த இடத்தில் சுமார் 2000 எழுத்துக்கள் கொண்ட ஒரு கட்டுரையை உங்களால் எழுதி புகார் அளிக்க முடியும். அதை எவ்வாறு எழுதுவது, அதன் அடிப்படை வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதை பின்தொடர்ந்து, chief ministers special cell-ல் கொடுக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் உங்கள் புகாரை உள்ளிட்டு, பிறகு அவர்கள் கொடுத்திருக்கும் முக்கியமான எண்ணையும் உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தினால் உங்களுடைய புகார் பதிவு செய்யப்படும்.

பிறகு மிக விரைவில் இதன் மீது நடவடிக்கை எடுத்து மக்களின் பணமும் விரைவாகக் கிடைக்கும், இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் அனைவரும் அதிக புகார் செய்வதன் மூலம் நன்மை பிறக்க வாய்ப்பு உள்ளது.

புகார் அளிப்பதற்கான தளத்தின் லிங்க் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

chief minister's special cell
chief ministers special cell

18 thoughts on “PACL பற்றி இப்போதே முதல்வரிடம் சொல்லுங்கள்”

  1. S.சங்கரவடிவு நான் Pacl ல் ஏஜண்டாக பணிபுரிந்தேன் அதன்மூலம் நிறையதெறிந்தவர்களிடம் பணம் பெற்று கம்பனியில் கட்டினேன் இப்பொழுது அவர்களுக்கு பதில்கூற முடியாமல் அவதிபடுகிறேன் அதிலும் பணம் கட்டிமுடித்தவர்களிடம் Pacl பாலிசியையும் வாங்கி கம்பனியில் சரண்டர் செய்து அக்னாலஜ்மன்டை வைத்துள்ளேன் முதலில் சரன்டர் பன்னியதற்கு பணம் கொடுத்தால் நன்றாக இரூக்கும் தாங்கள் Pacl மீது கவணம் செலுத்தி ஆவணம் செய்துதரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்

    Reply
  2. தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்
    என் பெயர் முஹமது யாசின் நான்
    P A C L எனும் நிதி நிறுவனதில் முகவறாக பணி செய்து நிறைய மக்களிடம் வசூல் செய்து கட்டினேன்
    2014 அன்று கம்பனியை மூடி செபியிடம் சென்ட்று விட்டது
    தற்போது 7 வருடமாக பணம் கிடைக்கவில்லை நீங்கள் தலையிட் டு உங்கள் மக்களுக்கு பணம் கிடைக்க செய்யுங்கள்

    Reply
  3. Policy no 5392653,5150913,5150914 registration no U292029728, U292049007, U292049008, total policy amount 60000, please send me my money shortly 🙏🙏🙏

    Reply
  4. Iya nan pacl rs25.000/ podullean.ennum yeanaku asal vardi yeathum varavillai nan potdu 5 years akuthu.plz yeanaku panam kidaikkumaru uthavi pannunga.
    பதிவு என் -u322025102
    11.01.2011

    Reply
  5. To,
    The honourable chief minister
    Vannakkam
    I m Maria antony samy from Coimbatore
    I was working as a agent in pacl company, I have collected and paid pacl more than 75 lakhs, for the last seven years, l have not get a single amount from the company,my coustomers are very much suffered and painful…and I kindly humble request you to getback the amount as early as possible,hope favourable reply for who are suffered in pacl,
    With regards and thanks….Maria antony samy

    Reply
  6. Sivanlingam
    Ayya nanga pacl 15years banam Kati mudincha nerathila band vankuna piraku pacl company close pannikidu poitanga.50,000,44,000 debosit thokaya potoum engaluku asalum vatiyum innum varaveilla please ninga than help panni pacl money vanki tharanum

    Reply
  7. Dear CM
    Kindly send us a clear instruction how to enter our complaint about PACL Petition in your portal without any confusion. We are all eagerly waiting your gateway to input our problems facing due to PACL. My self and our family & friends invested lot of money . Kindly help us to get the refund as you said.

    Reply
  8. ஐயா வணக்கம் :
    ஜெய்பூரை தலமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த PACL என்கிற நிதி நிறுவனமானது தமிழ் நாட்டிலும் 20 மாவட்டங்களில் இந்நிறுவனம் நடத்தப்பட்டது.விருதுநகர் பிரான்சில் நான் களப்பணியாளராக வேலைபார்த்து மக்களிடம் பணம் வசூலித்து (₹40,லட்சம்)வரை கட்டியுள்ளேன்.ஒவ்வொரு நாளும் பணம் கட்டியவர்கள் என்னிடம் வந்து எங்களுக்கு யாரையும் தெரியாது, எனக்கு பணத்தை நீ கொடு என்று சண்டையிடுகிறார்கள்.அதோடு மட்டுமின்றி என்னிடம் கொலை மிரட்டல், பலவந்தமாக பேசுதல் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் பெறும் மனவுளைச்சளுக்கும் ஆளாகியுள்ளேன். எனக்கென்று வீடு வாசல், காடுகரை எதுவும் கிடையாது. எனக்கென்று எந்த ஒரு உதவியும் கேட்பதைவிட என்னை நம்பி PACL நிறுவனத்தில் பணம் கட்டியவர்களுக்கு திரும்ப பணம் கிடைத்தால் மட்டுமே எனக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கும். ஐயா அவர்கள் கருணை உள்ளம் கொண்டு இக்கோரிக்கையை நிறைவேற்றினால் என்னைப்போல் களப்பணியாளர்களும் முதலீடு செய்த மக்களும் பெருமகிழ்ச்சி கொள்வார்கள் எந்நாளும் நன்றியுடனும் ,விஸ்வாசத்துடனும் இருப்பார்கள் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .

    இவண்:
    பா. குருசாமி
    தென்காசி மாவட்ட களப்பணியாளர்கள் மற்றும் முகவர்கள்.

    Reply
  9. ஐயா, நான் 50,000 ரூபாய் fixed deposit செய்துள்லேன்.செபியில் refund web siteல் பதிவு செய்துள்லேன், நோட்டர் siteல் complaint ம் செய்துள்லேன் என் கணவர் மூலமாக,. எப்போது எனக்கு பணம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

    Reply
  10. சார் நாங்கள் பணம் 💰 வராமல் கடன் வாங்கி வட்டியைக்கட்டி ரொம்ப கஷ்டப்படுகிறோம் சீக்கிரம் பணம் வந்தால் உங்களுக்கு கோடி கும்புடு

    Reply

Leave a Comment