தமிழ்நாடு: தமிழ்நாட்டில் PACL பணத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ஆனது அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பணத்தை கொடுத்து.
அதே போல் தமிழகத்திலும் பணம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுவாக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டால் பல தரப்பினரும் அரசியல் வாக்குறுதிகளையும், அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.
மேலும் படிக்க: PACL: 7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை
அதே போன்று தற்போது தமிழகத்தில் பெரும் கட்சியான ஒன்றாக கருதப்படும் திமுக தலைமையிலான தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?
இந்த சூழலில் திமுக தலைமை புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக #DMKmanifesto2021-ல் இடம்பெற வேண்டிய உங்களின் கருத்துகள், ஆலோசனைகளை – நேரிலோ, அஞ்சல்/மின்னஞ்சல் மூலமாகவோ பகிரலாம். என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
பணம் செலுத்திய மக்கள் அனைவருமே வடமாநிலங்களில் இருக்கும் சிபி அலுவலகம், லோதா கமிட்டி, சுப்ரீம் கோர்ட் போன்ற அனைத்திற்கும் (லட்டர், ஜிமெயில்) போன்றவற்றை அனுப்பி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: PACL: இணைய தளமானது, அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு மூடப்படும் – சிபி
இருப்பினும் தமிழகத்தில் இது ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கட்சி சார்பற்று அனைத்து நபர்களும் பசில்-லில் பணம் பெற வேண்டுமென்றால் கிடைக்கும் வாய்ப்பை அனைத்துமே பயன்படுத்த வேண்டிய சூழலில் அனைவரும் இருக்கிறார்கள்.
இதுபற்றி அக்கட்சியின் தலைவர் திமுக ஸ்டாலின் அவர்கள் கூறும் போது; மக்களின் கருத்தே தேர்தல் அறிக்கையாக இருக்கும். அந்த அறிக்கையை நாளைய ஆட்சியாக அமையும். சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம்! என்று கூறியிருக்கிறார்.
இப்படி இருக்க தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் பிஏசிஎல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகையால் அவர்களின் கருத்தை கூறுவதில் தவறில்லை என்று தெரியவருகிறது.
மேலும் படிக்க: PACL: 5000, 7000, 10000 ஆயிரம் போன்ற தொகைகளை மட்டுமே – வாய்ப்பு
காரணம் அனைத்து தரப்பினருக்கும் மக்கள் தங்களுடைய புகார்களை அனுப்பியிருக்கிறார்கள். இருப்பினும் தமிழ்நாட்டில் புகாரை தெரிவிக்க ஒரு புதிய வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தாமல் இருந்தால் அது நிச்சயம் நமக்கு நஷ்டம் ஆக இருக்கும்.
ஆகையால் கட்சி சார்பற்று தங்கள் பணம் கிடைக்க வேண்டும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கும் வகையில் நிச்சயம் இவருக்கு தகவல்களை அனுப்பலாம். அவர்களுக்கு தகவல்களை அனுப்ப புதிதாக வரும் மின்னஞ்சலும் உருவாக்கியிருக்கிறார்கள் அந்த மின்னஞ்சல் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
manifesto2021@dmk.in நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்து அனுப்ப முடியும்
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.