PACL: 7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை

தமிழ்நாடு PACL: 7 ஆயிரம் வரை பதிவு செய்தவர்களின் தவறுகளை திருத்த சிபி வாய்ப்பு அளித்து இருக்கிறது, இதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன நிலையில் தற்போது சிபி இணையதளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியே தகவல்கள்தான் இப்போது பார்க்க போகிறோம்.

PACL விவகாரத்தில் ஒரிஜினல் ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் அனைவரும் பதிவு செய்திருந்தாலும், படிப்படியாகவே பணங்களை மக்களுக்கு வங்கியில் வைத்துக் கொண்டிருக்கிறது சிபி.

மேலும் படிக்க: PACL: அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைந்தது, சிபி எந்த வித மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது (கொண்டுவரும்)

pacl 7000 edit option in sebi
pacl edit option

மேலும் படிக்க: PACL பணத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு – தமிழ்நாட்டில்

அப்போது இருந்த சூழலில் சரியான பரிந்துரை மக்களுக்கு இல்லாத காரணத்தினால், வாடிக்கையாளரின் இணையதளத்தில் பதிவு செய்யும் போது நிறைய தவறுகளை செய்ய நேரிட்டது.

இதன் காரணமாக பணம் மக்களுக்கு பணம் சென்றடைவதில் நிறைய சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதைத் திருத்துவதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இதில் 7000 வரை உள்ளவர்கள் மட்டுமே தற்போது தங்கள் பதிவில் தவறுகளை திருத்த முடியும் என்று அறிவிப்பானது வந்தது. இதற்க்கு அவகாசம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது.

இந்த கால அவகாசம் முடிந்த பின்னர் அதிக தொகை வழங்கவும். அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யவும்அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pacl 7000 edit option on sebi website
PACL 7000 edit option on Sebi website

மேலும் படிக்க: PACL: மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி

இருப்பினும் இந்த 7000 வரை உள்ளவர்கள் செய்த தவறை திருத்த முயலும் போது, திருத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதாவது வாய்ப்பு கிடைத்தும் முழுமையாக திருத்தியபின்னர் இறுதியாக அதை பதிவு செய்ய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

பொதுவாக சிபியின் இணையதளத்தில் எப்போதெல்லாம் மக்கள் பதிவு செய்வதற்காக கால அவகாசம் கொடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அவகாசம் முடியும் தருணத்தில் இது போன்ற நிறைய பிரச்சினைகள் இணையதளத்தில் எழுந்ததுண்டு.

உதாரணமாக, பதிவு செய்வதற்கான கடைசி தேதியில் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இணையதளத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யும் போது இது போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

இருப்பினும் இந்த விஷயத்தில் திருத்தம் செய்ய உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், அதற்கும் வாய்ப்புகள் குறைவு.

pacl 7000 edit option on sebi website pacl money
pacl 7000 edit option on sebi website

மேலும் படிக்க: 13 வகையான PACL பிரச்சனை நோடல் ஆபீசரிடம் புகார் – நீங்கள் செய்தீர்களா?

இது போன்ற பிரச்சினைகள் எழும்போது இணையதளம் 31ம் தேதிக்கு பிறகு திருந்துவதற்கான வாய்ப்பு முடக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது போன்ற பல பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் வடிக்கையாளர்களுக்கான வாய்ப்பை சிபி அதிகரித்துக்கொண்டே வந்தது குறிப்பிடத் தக்கதாகும். உதாரணமாக ஆறு மாத காலம் பின்னர் ஆறு மாத காலம் என்று மக்கள் புகார் தெரிவிக்கும்போது கால அவகாசம் நீட்டித்தது.

தற்போதும் இந்த 7000 வரை உள்ளவர்கள் சிலர் திருத்த முடியவில்லை என்று புகார் அளிக்கப் பட்டால் ஒருவேளை இதற்காக கால அவகாசமும் நீடிக்க வாய்ப்பு இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அதே போன்று தான் நடந்தது.

தற்போது உள்ள சூழலில் அக்டோபர் 31ஆம் தேதி பிறகே சிபியின் நடவடிக்கை முழுமையாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது பதிவை திருத்துவதற்கான இணையதளத்தில் ஒரு சில சிக்கல்கள் இருந்து கொண்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Comment