PACL பணம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பிஏசிஎல் பணம் பெறுவதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர் 2500 ரூபாய் முதல் 19,000 ரூபாய்க்கும் குறைவான உள்ளவர்களுக்கு செபி அறிவிப்பின் அடிப்படையில் பலருக்கும் பணம் கிடைத்தது.

இருந்தபோதும் ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது செய்த சில தவறான பதிவுகளால் பலருக்கும் பணம் பெறப்படாமல் இருக்கின்றது.

அதாவது 19 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளவர்களிலேயே நிறைய நபர்களுக்கு பணம் இதுவரை வங்கி கணக்கில் வரவும் வைக்கப்படவில்லை.

இதற்கு காரணமாக கூறு வரும் பிரச்சினை என்னவென்றால், பலரும் பதிவு செய்யும்போது சரியான ஆவணத்தை பதிவு செய்யாதது மற்றும் விண்ணப்ப பதிவின் போது நிலம் ஒதுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு சரியான பதிலை அளிக்காதது என்ற விளக்கங்கள் லோதா கமிட்டி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அனைவரும் தற்போது பணத்தை பெறுவதில் சிக்கல் எதிர்கொள்கின்றனர், இந்த விஷயத்தில் 19,000/- குறைவான பணத்திற்கு விண்ணப்பித்த ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பிரச்சனையை தீர்க்கவேண்டும்.

இருந்தபோதும், அதாவது தவறுகள் அனைத்தையும் சரி செய்வதற்கான வாய்ப்பை வரும் மார்ச் மாதம் 14ம் தேதி முதல் வழங்குவதாக செபி குறிப்பிட்டுள்ளது.

இருந்த போதும் இதில் பிரச்சனை என்னவென்றால், நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ஆம்/இல்லை என்று பதில் அளித்த ஆன்லைன் விண்ணப்பங்களில் தான் சிக்கல் உள்ளது.

எனவே, இதற்கான திருத்தம் எப்போது ஆன்லைனில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு அனைவரும் காத்திருக்கின்றது. வரும் மார்ச் ஆனாலும் இந்த கேள்விக்கான சரியான பதில் என்னவென்று கேட்டால், தற்போது இது சம்பந்தமான அறிவிப்பு வரவில்லை என்பது இதற்கான பதில்.

இருந்த போதும் இது கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர், ஒரு வேலை கிடைத்த பிறகு இதற்கு நீங்கள் எந்த விதமான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.

அதாவது ஒருவேளை PACL நிறுவனத்தில் பணம் செலுத்தும் போது உங்களுக்கான நிலம் ஒதுக்கப்பட்ட ஆவணம், நிறுவனத்தின் தரப்பில் உங்களிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த ஆவணம் கையில் இருந்தால், அதை பதிவேற்றம் செய்யலாம், நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம்.

அல்லது உங்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை என்றால், நீங்கள் இதற்கு முன்னர் பதிவு செய்யும்போது தவறாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தேர்வு செய்திருந்தால், அதை மறுமுறை இல்லை என்று தேர்வு செய்து உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

இதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். காரணம், செபி எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கான நிலம் ஒதுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பம் திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் தற்போது அனைவருமே செபி மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம், உங்களுக்கு ஒரு வேலை கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வ வலைதளமான இந்த பகுதியில் பார்க்கவும்.

Leave a Comment