PACL புதிய தகவல் 2024: குறைபாடுகளை சரிசெய்யும் வசதி மார்ச் 14, 2024 முதல்!

PACL-லில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பங்கள் தேர்வுசெய்யப்பட்டு 19,000/-க்கும் குறைவாக உள்ளவர்களின் பணம் செலுத்தபட்டுள்ளது. இருப்பினும், சில விண்ணப்பங்கள் குறிப்பிட்ட குறைபாடுகளின் காரணமாக பணம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆர்.எம். லோதா கமிட்டி ஆனது PACL முதலீட்டாளர்கள் எனும் விண்ணப்பதாரர்கள் தங்கள் Online விண்ணப்பங்களின் நிலையை ஆன்லைனில் https://www.sebipaclrefund.co.in இல் சரிபார்த்து, பின்பு குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான வசதியை முன்னர் பல முறை வழங்கியது.

கமிட்டி அத்தகைய குறைபாடுகள் சரிசெய்வதற்கான வாய்ப்பை ரூ. 15,000/- முதல் ரூ.17,000/-வரை வழங்கியது. இது ஜூன் 15, 2023 மற்றும் செப்டம்பர் 14, 2023 க்கு இடையில் விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய அனுமதிக்கப்பட்டது.

ஆனாலும், தற்போது மார்ச் 14, 2024 முதல் PACL பணம் கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ. 19000/- வரை மறுமுறை குறைபாடுகள் திருத்தும் வாய்ப்பினை வழங்க உள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் ரூ. 19000/-க்கு குறைவான பணதிற்கு விண்ணப்பித்து இந்தால், https://www.sebipaclrefund.co.in என்ற இணையதளத்தில் மறுமுறை தங்களின் விண்ணப்பங்களின் நிலையைச் சரிபார்த்து, குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய முடியும்.

குறைபாடுகளை சரிசெய்யும் வசதி விண்ணப்பதாரர்களுக்கு மார்ச் 14, 2024 முதல் ஜூன் 13, 2024 வரை கிடைக்கும். ஆகையால், அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்க. மற்றவர்களும் தவறவிடாமல் இருக்க, அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

கவனிக்க: பிஏசிஎல் லிமிடெட்டின் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பிஏசிஎல் லிமிடெட் (“கமிட்டி”) இல் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதற்காக ஆர்.எம். லோதா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment