தமிழ்நாடு: பிஏசிஎல் என்ற நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்கள் அனைவருக்கும் பணத்தையும் தற்போது செபி, லோதா கமிட்டி வழங்கிக் கொண்டிருக்கிறது,
இருந்தபோதிலும் இதில் பலவிதமான பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றன. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள பிஎச்இஎல் களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவருமே பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதனை கண்டிக்கும் வகையில் பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்கம் (தமிழ்நாடு) சேலத்தை சேர்ந்த பிஏசிஎல் சங்கத்தினர் தற்போது 03/02/2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை செபி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க: 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரை யாரும் செய்யாத, எடுக்காத ஒரு நடவடிக்கை
அவர்கள் வைக்கும் கோரிக்கையானது:
நீதியரசர் லோதா கமிட்டி அவர்கள் பிஏசிஎல் நிலங்களை விற்கும் முறைகேடான கும்பலிடம் இருந்து நிலங்களை மீட்டெடுக்கவும் மற்றும் RM லோதா கமிட்டி கையகப்படுத்திய பிஏசிஎல் சொத்துக்களை உடனே விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கிடவும் வலியுறுத்துகின்றனர்.
அதேநேரம் பிஏசிஎல் நிறுவனத்தில் ஆவணத்தை ஒப்படைத்ததற்கு உண்டான சீட்டு அதாவது அக்னாலேஜ்மென்ட் (pacl acknowledgement) எனப்படும் ஒரு வகை ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஒப்புதல் சீட்டின் அடிப்படையில் மக்கள் செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
PACL பணம்: விண்ணப்பங்களை திருத்த கடைசி தேதி – சிபி அறிவிப்பு
அதே நேரம் பணம் செலுத்தியபின் பாண்டு இருந்தும் பதிவு செய்ய தவறியவர்கள் பலபேர் இருக்கின்றனர். ரசீது போன்றவை தொலைத்தவர்கள், இறந்தவர்கள் ஆவணம் போன்ற அனைவரும் பல இன்னல்களை சந்தித்து வரும்.
இந்த சூழ்நிலையில் மண்டல அளவில் சேவை மையம் திறந்து உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்னெடுத்து இந்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தப் போராட்டமானது 03/02/2021 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் செபி அலுவலகம் முன்பு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.