2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரை யாரும் செய்யாத, எடுக்காத ஒரு நடவடிக்கை

PACL: தமிழ்நாட்டு நீதிமன்றத்திலிருந்து முதல்முறையாக PACL சம்பந்தமாக லோதா கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல் பிஏசிஎல் நிலங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

pacl latest news in tamil 2021 today
pacl latest news in tamil 2021 today

இந்த நிலங்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்துவருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது சம்பந்தமாக மதுரை கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றமானது குறிப்பிட்டது என்னவென்றால்?

சுப்ரீம்கோர்ட்டில் பார்வையில் இந்த பிஏசிஎல் சம்பந்தப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மற்ற நீதிமன்றங்கள் இதில் தலையிட கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் இதில் நில மோசடி நடந்திருப்பது அப்பட்டமாக தெரிய வருகிறது. ஆகையால் இந்த நில மோசடி குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி ஆனது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். PACL நிலங்களை மீட்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் ஆனது சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க: உங்கள் PACL தவறுகளை எப்படி திருத்துவது?

மேலும் இந்த வழக்கை தொடுத்த ஆறுமுகசாமியின் தலைமையிலான குழுவானது லோதா கமிட்டியை சந்திக்கவும் அனுமதி கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செபி சம்பந்தப்பட்ட மக்களுக்கு பணங்கள் வழங்கிக் கொண்டு இருந்தாலும், அவைகள் வட்டியோடு வழங்க வேண்டும் என்றால் நிலங்கள் அனைத்துமே கையகப்படுத்தப்பட்டு கூடிய விரைவில் விற்பனை செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய விவாதம் ஆகும்.

அந்த வகையில் இந்த நிலங்கள் இதுபோன்ற போலி ஆவணங்களை தயார் செய்து விற்கும் கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும் என்று முயற்சியில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில் இருந்து தற்போது 2021 ஆம் ஆண்டு வரை யாரும் செய்யாத, எடுக்காத ஒரு நடவடிக்கை இது என்பதும் குறிப்பிட தக்கதாகும். இதைப்பற்றி மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தை பார்க்கவும்.

3 thoughts on “2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரை யாரும் செய்யாத, எடுக்காத ஒரு நடவடிக்கை”

  1. Hearty Congratulations Mr. Arumugasamy Sir & Team. I am very proud to say in his team work in Tirunelveli Office. Thank You Sir.

    Reply

Leave a Comment