தமிழ்நாடு: 2021 ஆம் ஆண்டுக்கான செபியின் முதல் PACL அறிவிப்பு. ரூபாய் 10,000 ஆயிரம் வரை பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு.
ஜனவரி-1 2021 முதல் மார்ச்-31 2021 வரை வழங்கப்படும் என்று செபி தனது இணையதளத்தில் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு டிசம்பர் 16 2020 அன்று வெளியானது.
PACL-லில் பணம் செலுத்திய மக்களின் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்க ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அவர்களின் பெயரில் ஒரு கமிட்டியை உருவாக்கி உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
மேலும் அறிய: ஜனவரி 1-ம் தேதி முதல் நாம் செய்யவேண்டிய முக்கியமான PACL வேலை
அதனடிப்படையில் லோதா கமிட்டி மற்றும் செபி இணைந்து PACL ஆவணங்களை விற்று முதல் கட்டமாக 2500 என்ற கணக்கில் மக்களின் பணத்தை வங்கியில் வரவு வைக்க தொடங்கியது.
அதன் அடிப்படையில் 5,000 7,000 என்று போனை இந்த தொகை தற்போது 10,000 வரை மக்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இது எந்த வகையில் சாத்தியம் என்றால், செபி ஒரு இணையதளத்தை திறந்து அதில் மக்களின் பணம் செலுத்திய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கூறியது.
அப்போது மக்கள் செய்த சில தவறுகள் மற்றும் தானாகவே அமையப்பெற்ற பெயர் மாற்றம் மற்றும் ஊர் மாற்றம் போன்ற சிக்கல்களால் சில ஆவணங்களில் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு செபியால் வரவு வைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டது.
அதனடிப்படையில் 5000 மற்றும் 7000 வரை பணம் செலுத்திய ஆவணங்களை திருத்துவதற்கான வாய்ப்பை சிபியின் இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.
மேலும் அறிய: பாஸ்வேர்டு மாற்றும் பகுதி மீண்டும் சிபியின் இணையத்தில்
இந்த சூழலில் தற்போது செபி அளித்திருக்கும் தகவலில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால்? ரூபாய் 10,000 வரை பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை ஆராய்ந்து அவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டோம்.
இருப்பினும் ஓரிரு தவறுகள் இருந்த காரணத்தினால் சில ஆவண பதிவை எங்களால் சரியாக ஆராய்ந்து அவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி இயலவில்லை.
ஆகையால், அப்படிப்பட்ட தவறுகள் இருக்கும் ஆவணங்களை மறுஆய்வு செய்து மறுமுறை பதிவேற்றம் செய்யும் வாய்ப்பை ஜனவரி-1 2021ஆம் தேதி முதல் மார்ச்-31 2021 ஆம் தேதி வரை வழங்குகிறோம் என்று செபி தனது இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
நீங்கள் இதற்கு முன்னர் பதிவு செய்த ஆவணங்களில் தவறு இருப்பின் அந்த விவரங்களை ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு செபி இணையதளத்தில் நீங்கள் சரி செய்ய இயலும்.
உங்கள் ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அந்த தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அவ்வாறு தவறுகளைத் திருத்தி மறுபதிவு செய்தவர்களுக்கான பணம் பெறப்பட்டதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும் 2021 ஆம் ஆண்டு செபியின் முதல் PACL அறிவிப்பு இதுதான் என்பதும் குறிப்பிட தக்கதாகும். ஆகையால் சிபியின் இணையதளத்தில் உங்களின் ஆவணங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள முடியும். இது 10,000 வரை பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிறுவனம் வடமாநிலத்தை சேர்ந்த தாக இருக்கிறது. அதாவது இந்தி மொழியில் மட்டுமே இந்த தகவல்கள் மக்களை அதிகம் சென்றடைகிறது.
செபியின் இதுபோன்ற தகவல்கள் முன்னதாக தெரிய வந்து இருந்தால், மக்கள் பொறுமையாக அவர்களுடைய ஆவணங்களை சரி செய்து பதிவேற்றம் செய்திருக்க முடியும்.
தகவல்கள் மிக பொறுமையாக, காலதாமதமாக தெரியவந்ததால் மக்கள் அவசர அவசரமாக பதிவேற்றம் செய்ய நேரிட்டது. ஆகையால்தான் தவறுகள் நிகழ்ந்து விட்டது.
ஆகையால் ஜனவரி 1ம் தேதி வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழக PACL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தயவுசெய்து பகிருங்கள்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
Sir I have not registered the PACL refund amount, yet Can I register now?