தமிழ்நாடு: பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களின் கவனத்திற்கு சிபி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது 7 ஆயிரம் ரூபாய் பணம் பெறுபவர்கள் விண்ணப்பங்களை திருத்த கடைசி தேதி அக்டோபர் 31, 2020, அதற்க்கு முன்னர் உங்களின் விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்யவும். என்று அதில் ஒரு முன்னறிவிப்பை கொடுத்திருக்கிறது.
மேலும் படிக்க: PACL: 7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை
மேலும் படிக்க: PACL Tamilnadu Telegram Group Link
அதாவது இந்த அறிவிப்பு 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிபி கூறியதாவது; அக்டோபர் 15, 2020 துணை: முதலீட்டாளர்கள் / விண்ணப்பதாரர்கள் ரூ .7,000 / – வரை விண்ணப்பத்திற்க்கான கொண்ட கடைசி தேதி.
அதாவது PACL விண்ணப்பங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான கடைசி தேதி. என்று குறிப்பிட்டிருக்கிறது.
அதோடு மூன்று விதமாக அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதலில் ஜனவரி 15, 2020 தேதியிட்ட லோதா கமிட்டி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி தகவல்களை வெளியிட்டதாகவும்.
pacl பாண்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு pacl tamil news
அதில் வாடிக்கையாளர்களின் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காக ஒரு வலைதளத்தை (www.sebipacirefund.co.in) உருவாக்கியதாகவும், ஜனவரி 24, 2020 அன்று செயல்பாட்டுக்கு அது வந்ததாகவும் கூறியுள்ளது.
பின்னர் அந்த வலைதளத்தின் கடைசி தேதி ஜூலை 31 மாற்றப்பட்டதாகவும் கூறி இருக்கிறது. அதன் பிறகு ஜூலை 31 வரை இருந்த தேதி குழுவின் முழு கண்காணிப்பில் இருந்து, அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்க பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அந்த தேதி நீடிக்க பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு 5,000 முதல் 7,000 பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதில் தவறுகள் இருப்பினும் அதை திருத்தவும் வாய்ப்பு கொடுத்தது.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?
மேலும் படிக்க: PACL: இணைய தளமானது, அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு மூடப்படும் – சிபி
அதாவது பெயர் மாற்றம், ஊர்மாற்றம், வங்கி கணக்கு தவறுதலாக பதிவு செய்தவர்கள் போன்றவர்கள் 7,000ம் இருப்பவர்கள் மட்டுமே பதிவை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.
தற்போது அத்தகைய திருத்தப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31, 2020. ஆகையால் அதற்கு முன்னர் விண்ணப்பங்களில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்யவும் என்று கூறியிருக்கிறது.
இந்த அறிக்கையானது நோடல் அதிகாரி மற்றும் செயலாளர் நீதிபதி (ஓய்வு) ஆர்.எம். லோதா கமிட்டி அவர்களால் வழங்கப்பட்டது. எனவே உங்கள் பதிவில் தவறுகள் இருப்பினும் அதை திருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என்றுள்ளது.
இதில் இன்னும் நிறைய குழப்பங்கள் உள்ளது, அதாவது 7000ம் பதிவு செய்தும் பணம் கிடைக்கவில்லை. அப்படியானால், 7,000 உள்ள அனைவருமே தவறுகள் இருப்பவர்கள் என்றால், திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
மேலும் படிக்க: PACL பணத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு – தமிழ்நாட்டில்
7,000 இருப்பவர்கள் மட்டுமே தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது சிபி. உங்கள் பணம் கிடைக்கவில்லை, அதோடு உங்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், உங்கள் கருத்தைக் கீழே உள்ள இணைய தளம் மூலமாக தெரிவிக்க முடியும்.
இதனால் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பை சிபி வழங்கக் கூடும். தற்போது இந்த தேதி முடிவடைந்த பின்னர் 7 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கலில் சிபி வேலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.