இந்தியா: பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களின் பணம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், இதில் இருக்கும் சந்தேகம் என்னவென்றால்?
தவறை திருத்துவதற்கு வாய்ப்பு கொடுத்தது சிபி. அதாவது பதிவு செய்து அவர்களில் சிலர் பதிவு செய்த தகவல் தெளிவாக இல்லாததாலும், ஆவணங்களை மாற்றி பதிவு செய்ததாகவும், ஒரு சில பெயர் மாற்றம், ஊர் மாற்றங்கள் போன்றவை இருந்ததாலும் மறுமுறை அதை திருத்தி புதிதாக பதிவேற்றம் செய்வதற்கு வாய்ப்பை வழங்கியது சிபி.
சிபி கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த 5000, 7000, 10000 ஆயிரம் போன்ற தொகைகளை மட்டுமே திருத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதிலும் ஒரு சில கேள்விகள் என்னவென்றால்? பணம் பெறப்பட்டு மக்கள் தகவல்கள் சரியாக இருந்தவர்கள் ஆவர். அப்படியென்றால் பணம் பெற முடியாது மக்களின் தகவல்கள் சரியாக இல்லையா என்ற கேள்வி எழும்புகிறது.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?
அப்படி இருந்தால் அனைவருக்குமே திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிறைய நபர்களுக்கு பணம் வரவில்லை இருப்பினும் அவர்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பும் சிபியின் இணையதளத்தில் கிடைக்கவில்லை. அப்படி என்றால் இதற்கு காரணம்?
இதுபோன்ற பல கேள்விகள். அதிலும் முக்கியமாக பதிவுகளை திருத்துவதற்கான வாய்ப்பு கிடைத்து, அவர்கள் தங்கள் பதிவுகளை திருத்திய பின்னர் அவர்களது பணம் பெறப்பட்டதா? என்று கேள்வியும் உண்டு.
ஆனால் இந்த கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. அதாவது அதுபோன்ற பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் பதிவை திருத்தி பதிவு செய்யும்போது அவர்களுக்கு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: புகார்களுக்கு யாரை தொடர்புகொள்வது என்பதுபற்றிய முக்கியதகவல்தான் இதில் பார்க்கப்போகிறோம்.
ஆனால் இதிலிருக்கும் குழப்பம் என்னவென்றால் பதிவுகளில் தவறு இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் வங்கி கணக்கில் வந்திருக்கவேண்டும். இரண்டுமே இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் நிலைமை என்ன என்று தான் குழப்பம் அதிகமாக இருக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது, என்னவென்றால் சிபி கொடுத்துக்கொண்டிருக்கும் தொகைக்கு மட்டுமே பதிவு தவறாக இருப்பின் அடுத்த வாய்ப்பு கொடுத்து வருகிறது.
இருப்பினும் மக்கள் புகார்களை தொடர்ந்து அளித்து கொண்டு இருக்கின்றனர். உங்கள் புகார்களை கீழே உள்ள இந்த தளத்தை பயன்படுத்தி நீங்கள் புகார்களை கொடுக்கலாம்.
பல பிரச்சனை குறித்து மக்கள் தரப்பில் புகார் கொடுக்கும் போதெல்லாம், சிபி கூறும் ஒரே பதில் என்னவென்றால் வேலை நடந்துகொண்டிருக்கிறது நிச்சயம் அனைவருக்கும் பணம் கிடைக்கும்.
அதோடு திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறது. ஆகையால் இது சிறிது ஆறுதல் அளித்தாலும், அதிக தொகை உள்ள அக்னாலேஜ்மென்ட் போன்ற வைகள் மக்கள் மனதை அதிகம் வருத்தமடைய செய்கிறது.
சுப்ரீம் கோர்ட் இதில் வாடிக்கையாளர்களை மற்றும் ஏஜென்டுகளை அனைவருமே பொறுமை காக்க வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளது இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே. இருப்பினும் வாடிக்கையாளர்கள் தேவையான தருணத்தில் பணம் கிடைக்காததால் அதிக மன வருத்தத்தில் இருக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஏஜெண்டுகளுக்கு இடையே நிறைய பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: ஆவணங்களை கேட்பது சரியா மக்கள் எவ்வாறு அதை வைத்திருக்க முடியும்
இதில் ஒரு விஷயம் உண்மையானது, அது என்னவென்றால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பணம் கொடுக்கும் உரிமை சிபிக்கு மட்டுமே உண்டு. பணம் அனைத்தும் சிபி கைகளால் மட்டுமே மக்களுக்கு சென்றடைய முடியும். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்னவென்றால்? இந்த கொரோனா தருணத்திலும் சிபி தனது வேலையை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கிறது. தற்போது ஐயாயிரத்தில் தொடங்கி கொரோனா காலத்திலேயே பத்தாயிரம் வரை மக்கள் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்துகொண்டிருக்கிறது.
தற்போது கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மொத்த பணமும் மக்களுக்கு சென்றடைந்து இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. ஆகையால் இந்த விஷயத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளருக்கும் கொரோனா காரணத்தினால் PACL விஷயத்தில் பொறுமை காக்க வேண்டி இருக்கிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.