PACL: பணத்தைமீட்க தமிழகத்தில் ஓர் புதியமுயச்சி, சுப்ரீம்கோர்ட் அளவில் உங்கள் ஆவணம் செல்ல ஒரு எளியவழி கிடைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்தியாமுழுக்க இருந்தாலும், தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்போது இந்த பணம் சிபி தரப்பில் வழங்கப்பட்டாலும், பெரியதொகைகளை கொண்ட பாலிசி, வங்கி காசோலை, அக்னாலோஜிமேட் போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.
இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டின் PACL வாடிக்கையாளர்கள் பணத்தை மீட்டுத்தர PACL investors Welfare Association என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பானது போராடுகிறது.
இது சுப்ரீம் கோர்ட் அளவில் PACL வாடிக்கையாளர்கள் பணத்தை மீட்க போராடுகிறது, தங்களது இந்த பொதுநல அமைப்பை அங்கீகாரத்துடனும் பதிவுசெய்துள்ளது.
தற்போது PACL சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த அமைப்பானது தங்கள் வாதத்தை முன்வயக்க மக்களின் ஆதரவை கோரியுள்ளது.
அதாவது, PACL வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் வேலைகளைவிட்டு போராடுவது சாத்தியமற்றது ஆகும்.
ஆகையால், தங்கள் பணம் செலுத்திய விவரங்களை இந்த அமைப்பின் இணையத்தளத்தில் பதிவிடுவதன்மூலமாக உங்களின் பணம் PACL நிறுவனத்தில் இருப்பதாக இந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும்.
அதற்க்கு அனைவரின் பாலிசி பற்றிய விவரங்களை இந்த அமைப்பின் இணையத்தளத்தில் பதிவிடவேண்டியது அவசியமாகும்.
மிக முக்கியமானது என்னவென்றால் உங்களின் நிலையை மட்டும் குறிப்பிடக்கூறியுள்ளது இந்த PACL investors Welfare Association அமைப்பு. உங்களிடமிருந்து வேறு எந்த பணம்செலுத்திய விவரங்களையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது, PACL பாண்ட், PAN கார்டு, போன்றவை எதுவும் வேண்டாம் நாம் பணம் செலுத்திய PACL நம்பரையும், மொபைல் நம்பரையும் உள்ளிட்டு உங்கள் நிலையை இதில் சுலபமாக பதிவுசெய்யலாம்.
மேலும் படிக்க: இத்தலத்தில் பதியலாம்? உண்மை என்ன?






இந்திய அளவில் PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூட்டமைப்பாக செயல்பட உள்ளதாகவும், இதன் நோக்கம் கடைசி முதலீட்டாளர் வரையிலும் அவர்களின் சேமிப்பை மீட்டெடுப்பது மட்டுமே என்றும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட பட்டியலும் இதில் உள்ளது, ஆகையால் எந்த மாவட்டத்தில் எவ்வளவு PACL வாடிக்கையாளர்கள் உள்ளனர், அவர்கள் எவ்வளவு பணத்தை PACL நிறுவதில் செலுத்தினர் என்பதை சுலபமாக சுப்ரீம் கோஸ்ட்டுக்கு தெரிவிக்கலாம் என்று கருதுகிறது இந்த தமிழகத்தை மய்யமாக கொண்ட அமைப்பு.
மேலும் படிக்க: PACL தமிழ் டெலிகிராம் குரூப்






இதன்மூலமாக உங்கள் தகவலானது மிக எளிதில் செபி லோதா கமிட்டியை தாண்டி சுப்ரீம் கோர்ட்டை சென்றடையும் என உறுதியளிக்கிறது PACL investors Welfare Association அமைப்பு.






நியாயமாக கிடைக்க வேண்டிய முதலீட்டு தொகையை சட்டப்படி பெறுவதற்கான கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது என்கிறது இந்த தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட அமைப்பு.
தமிழகத்தில் பல PACL சீனியர்கள் இருந்தாலும் யாரும் முன்வராத இந்த தருணத்தில் முன்வந்து உதவநினைக்கும் இவர்களுக்கு நீங்கள் விரும்பினால் ஆதரவளிக்கலாம்.
இதற்க்கு எந்தவித பணமும் செலவாகாது, உங்களுக்கு ஒருவேளை வெறுப்பமில்லையெனில், தயவுசெய்து மற்றவர்களுக்காவது பகிருங்கள் அவர்களும் இதனை அறிந்துகொள்ளட்டும்.