தமிழ்நாடு: பிஏசிஎல் பணம் திரும்ப பெறுவதற்காக இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்யக்கூடிய அந்த முக்கிய இணைய தளமானது, அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு மூடப்படும் என்று சிபி பத்திரிக்கை செய்தி ஒன்றில் வெளியிட்டதாக விகாஸ் திருப்பாட்டி அவர்கள் கூறியிருக்கிறார்.
அதோடு இது சம்பந்தமாக அவர் லக்னோவில் உள்ள சிபி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்து இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க: PACL: பதிவில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்றவர்கள்
மேலும் படிக்க: PACL: அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைந்தது, சிபி எந்த வித மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது (கொண்டுவரும்)
தற்போது சிபியின் இணையத்தளத்தில் rs.7000 பதிவு செய்தவர்களின் பதிவில் உள்ள தவறுகளை திருத்துவதற்கு அக்டோபர் 31ஆம் கடைசி தேதி என்று சிபி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இருப்பினும் அஃபார் என்ற பிரபல செய்தித்தாளில் 7000 வரை உள்ள தொகைக்கான பணத்தை செலுத்தி விட்டதாகவும், இந்த இணையதளம் 7000 உள்ளவர்களுக்கான கணக்கை முடக்க போவதாகவும் சிபி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு இது சம்பந்தப்பட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சிபி தரப்பில் ஒப்படைக்க உள்ளதாகவும், விகாஸ் திருப்பாட்டி அவர்கள் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: PACL: 5000, 7000, 10000 ஆயிரம் போன்ற தொகைகளை மட்டுமே – வாய்ப்பு
அவர் மேலும் கூறுகையில் 5,000 முதல் 7,000 வரை சிபி தொகையைக் கொடுத்து விட்டதாக கூறி இருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய நபர்களுக்கு அவர்களுடைய தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை.
நிறைய நபர்கள் நிலபதிவேடு விவகாரத்தில் (ஆம்) என்று பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. பின்னர் எப்படி சிபி இணையதளத்தில் அனைவருக்கும் பணம் கொடுத்து விட்டோம் என்று கூறமுடியும்.
அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு rs.7000 உள்ளவர்கள் கணக்கை சரி பார்க்கவும் திருத்தவும் முடியாது என்று எப்படி சொல்ல முடியும். என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து சிபியின் அலுவலகத்தை முற்றுகையிடுவும் முடிவு எடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க: நீங்களும் பார்க்கலாம், உங்களுக்கும் உரிமையுண்டு சிபி எடுத்த முடிவு!!
ஆகையால் அவர் நடந்துபோகும் இந்த முற்றுகை போராட்டத்திற்கு சீனியர்கள் அனைவரும் வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார் விகாஸ் திருப்பாட்டி.
ஆனால் சிபி சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இது பற்றி தெளிவான எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. இருப்பினும் ஹிந்தி நியூஸ் பேப்பரில் இவ்வாறு வந்ததாக விகாஸ் திருப்பதி அவர்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
எது நடப்பினும் அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு தெளிவாக தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை விகாஸ் திருப்பாட்டி அவர்கள் லக்னோவில் உள்ள சிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போது ஏதேனும் முக்கிய திருப்பங்கள் மக்களுக்கு சாதகமாக அமையும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.