PACL: அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைந்தது, சிபி எந்த வித மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது (கொண்டுவரும்)

தமிழ்நாடு: 7,000கும் குறைவான தொகை செலுத்தியவர்களின் கணக்கை திருத்தவோ அல்லது சரிசெய்யவோ அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு இயலாது என்று சிபி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தற்போது அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில், சிபி எந்த வித மாற்றங்களை இணையதளத்தில் கொண்டு வந்திருக்கிறது என்பது பற்றிய குழப்பங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் படிக்க: PACL: மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி

sebi pacl refund new update
sebi pacl refund new update

இதுவரை சிபி குறிப்பிட்ட எந்த மாற்றங்களையும் அதனுடைய இணையதளத்தில் கொண்டுவரவில்லை. அதாவது பொதுவாக எந்த ஒரு அறிவிப்பை சிபி வெளியிட்டாலும் தனது இணையதளத்தில் ஆங்கிலத்திலும் சில இந்தி பத்திரிக்கைகளில் இந்தி மொழியிலும் வெளியிடும்.

அப்படி வெளியிடும் அந்தத் தகவலும் சில நாட்கள் கழித்து காலதாமதமாகவே வரும் தமிழ்நாட்டிற்கு. இது போன்ற தாமதத்தின் காரணமாகவே இணையதளத்தில் பதிவு செய்யும்போது பல தவறுகள் நடந்ததாக மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

pacl today latest refund news in tamil
sebi pacl refund new update

தற்போது சிபி அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு 7000 இற்கும் குறைவான உள்ளவர்களின் கணக்கை சரி பார்க்க இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தபோது, அடுத்த அறிவிப்பு அதிக தொகை உள்ளவர்களுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில். இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் சிபி தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் நாள்தோறும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக ஒரிஜினல் ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் அனைவரும் சிபி இணையதளத்தில் சமர்பித்து விட்டனர்.

மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?

sebi pacl refund new update
sebi pacl refund new update

சிலர் மட்டுமே தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் வைத்துள்ளனர். அவர்களுக்கு சரியான தகவல் சென்றடையவில்லை. இதில் சிபி சமர்ப்பிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட சில ஆவணங்களை மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கின்றனர்.

உதாரணமாக அக்னாலேஜ்மென்ட், காலாவதியான வங்கி காசோலை போன்றவை அதை ஒரு சில நபர்கள் பதிவு செய்தும் இருக்கின்றனர் சரியான ஆலோசனை கிடைக்காத காரணத்தினால்.

அந்த வகையில் பார்க்கும் போது புதிதாக தற்போது ஏதாவது அறிவிப்பை சிபி வெளியிடக் கூடும். ஒருவேளை கையில் வைத்திருக்கும் ஆவணங்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கலாம். இல்லையெனில் ஏற்கனவே செய்த தவறுகளை, அதாவது 7,000கும் அதிகமான பணம் செலுத்தியவர்களுக்கு வாய்ப்பை வழங்கலாம். இதுபோன்ற விஷயங்களில் சிபி தற்போது வேலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள்.

மேலும் படிக்க: PACL நிறுவனத்தில் அதிக பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

sebi pacl refund new update
sebi pacl refund new update

தற்போது பத்தாயிரம் வரை சிபி வங்கி கணக்கில் மக்கள் பணத்தை செலுத்தி கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கது அனைவருமே தவறுகள் செய்திருக்கின்றனர். 7,000த்தில் மட்டும் தவறுகள் இருக்கும் என்று கருதமுடியாது. லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் ஆவணப் பதிவில் தவறு செய்து இருக்கின்றனர்.

ஆகையால் இது குறித்து எந்த அறிவிப்பை வெளியிடுவது என்று செபி கூடிய விரைவில் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடகூடும். ஆனால் இதுவரை இணையதளத்தில் சிபி எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை.

சிபி என்ன அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது அந்த அறிவிப்பு மட்டுமே சிபியின் இணைய தளத்தில் இதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: PACL: 7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை

3 thoughts on “PACL: அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைந்தது, சிபி எந்த வித மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது (கொண்டுவரும்)”

Leave a Comment