PACL தமிழ்நாடு: வரும் 31-ஆம் தேதி யோடு சிபி கொடுத்த அவகாசம் நிறைவடைய உள்ளது, ஆகையால் 10,000 வரை பதிவு செய்தவர்கள் அனைவருமே சிபியின் இணையதளத்தை தொடர்பு கொண்டு அதில் உங்கள் பதிவில் ஏதேனும் தவறுள் திருத்த வாய்ப்பு அளித்து இருந்தால் அதை விரைந்து செய்வது உசிதமாகும்.
அதாவது பிஏசிஎல் விவகாரத்தில் சிபி மற்றும் லோதா கமிட்டி இணைந்து பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பணத்தை திரும்ப வழங்குவதற்காக ஒரு இணையதளத்தை தொடங்கியது.
அந்த இணையதளத்தில் இந்தியா முழுக்க பணம் செலுத்திய ஆவணங்களை அவர்களின் அடையாள ஆவணங்களுடன் பதிவு செய்ய ஆணையிட்டது.
அதனடிப்படையில் அனைவருமே பதிவு செய்தனர், அதில் தற்போது பரிசீலனை செய்யும் போது பலவிதமான தவறுகள் இருப்பதை உணர்ந்து சிபி மற்றும் லோதா கமிட்டி.
ஆகையால் அந்த தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்தது, அதில் 5000, 7000 போன்ற தொகைகளில் தொடங்கி தற்போது 10 ஆயிரம் வரையிலான பணம் செலுத்திய ஆவணங்களை பதிவு செய்தவர்கள் ஏதேனும் பிழை செய்திருந்தால் அதை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.
இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது, அது தற்போது மார்ச் 31, 2021 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. ஆகையால் பிஏசிஎல் பணம் செலுத்திய (அதாவது) 10 ஆயிரம் ரூபாய்க்கு பணம் செலுத்திய அனைவருமே தங்களின் பதிவு விவரத்தை சரி பார்த்தல் அவசியம்.
ஒருவேளை உங்களுக்கு அதில் திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கும் எனில், அதை திருத்தி மறு பதிவு செய்வது மிக அவசியமாகும்.
அவ்வாறு இதற்கு முன் திருத்தி மறு பதிவு செய்தவர்கள் அனைவருமே பணம் கிடைத்துள்ளது. சரியாக செய்தவர்களுக்கும் பணம் கிடைத்துள்ளது.
குறுகிய நாட்களே உள்ளதால் நிறைய நபர்கள் இந்த தகவல் தெரியாமல் இருக்கின்றனர். ஆவியால் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து அவர்களையும் செய்யவாய்ப்பது அவசியமாகும்.
விரைவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொகையானது மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதோடு, அவர்களுக்கும் அவர்கள் பதிவில் தவறுகள் இருப்பினும் திருத்துவதற்கு வாய்ப்பும் வழங்கப்படும்.
மற்றும் பதிவு செய்யாதவர்கள் பதிவுசெய்வதற்கான வாய்ப்பும் சிபியின் மூலமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.