PACL: எந்தவித அறிவிப்பும் இன்றி செபியின் பிஏசிஎல் இணையத்தளமானது மீண்டும் மக்களின் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மூடப்பட்ட இந்த பிஏசிஎல் தளமானது தற்போது அறிவிப்பு இன்றி செபி திறந்து வைத்திருக்கிறது.
இறுதியாக பத்தாயிரம் வரை பதிவு செய்தவர்கள் தங்களின் பதிவை தெரிந்து கொள்ளலாம் என்று செபி குறிப்பிட்டிருந்தது.
பின்னர் அதற்கு ஒரு அவகாசத்தையும் தெரிவித்து மார்ச் 31 ஆம் தேதியோடு அதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்து தளத்தை முடக்கியது,
அதன் பின்னர் நல்ல அறிவிப்பு வரும் என்று மக்கள் காத்திருந்த தருணத்தில் தற்போது எந்த அறிவிப்பும் இன்றி சிபி அதனுடைய இணையதளத்தை திறந்து இருக்கிறது.
தற்போது இந்த தளத்தில் பதிவு செய்தவர்களின் பதிவை சரிபார்க்க முடியும். அதாவது அவர்களின் பதிவு நிலவரம் என்ன என்பதை மக்களால் பார்க்க இயலும்.
செபி வேறு எந்த ஒரு தனிப்பட்ட பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவில் செபியின் தனிப்பட்ட தளத்தில் எதிர்பார்த்த அறிவிப்பு ஏதேனும் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எந்த ஒரு விஷயத்திலும் தனது அறிவிப்பை அதன் முக்கிய தளமான sebi.gov.in என்ற தளத்தில்தான் செபி பதிவு செய்யும். ஆகையால் அடுத்த முக்கிய அறிவிப்புக்காக அந்த தளத்தை பின் தொடர வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இப்போது உள்ள சூழலில் உங்களின் பதிவை நீங்கள் சரி பார்க்க இயலும் உதாரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான தொகையை செலுத்திவர்களின் நிலையை சரி செய்ய ஏதேனும் ஆப்ஷன் வழங்கி இருக்கக்கூடும்.
முதலில் வேலையை செய்த பின்னரே செபி அதற்கான அறிவிப்பை பதிவு செய்யும், உதாரணமாக முதலில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி செபி ஒரு சில விஷயங்களை செய்த பின்னரே அதற்கான அறிவிப்பை தெரியப்படுத்தும்.
ஆகையால் அதிக தொகைக்கு எடிட் இருக்கிறதா என்பதை நாம் தற்போது ஆய்வு செய்ய கூடும். அதற்காக செபி பிஏசிஎல் தளத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.