pacl land allotment yes: கடந்த மாதம் 31ம் தேதிக்கு பிறகு செபி மற்றும் லோதா கமிட்டி தரப்பிலிருந்து வெளியாகும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட தகவல் என்னவென்று தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
31ம் தேதிக்கு பிறகு செபியின் இணையதளம் நிறுத்தப்பட்டாலும், பிஏசிஎல் வேலையை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் பிஏசிஎல் பணம் செலுத்திய அனைவருக்கும் பலவிதமான சிக்கல் இருந்து வருகிறது.
பிஎசிஎல் பணத்தை திரும்ப பெறுவதற்காக அனைவரும் புகார் அளிப்பதற்காக, வழங்கப்பட்டிருந்த நோடல் ஆபீசர் அவர்களின் மெயில் ஐடிக்கு தங்களது புகாரை பதிவு செய்தனர்.
அதன் விளைவாக அனைவருக்கும் பதில் அனுப்பப்பட்டு வருகிறது குறிப்பாக நிலப்பதிவு இருக்கிறதா என்ற கேள்விக்கு தவறுதலாக பதிவு செய்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் செபி தரப்பில் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது, நீங்கள் எந்த ஈமெயில் ஐடியில் உங்கள் புகாரை அனுப்பினீர்களோ அதே ஈமெயில் ஐடிக்கு நல்ல பதிலை செபி தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
அது என்னவென்றால் நிலப்பதிவில் தவறுதலாக குறிப்பிட்டவர்களுக்கான வேலை இதுவரை தொடங்கப்படவில்லை ஆகையால் அனைவரும் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகையால் உங்களுடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆங்கிலம் எழுத வரவில்லை என்றாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவை நீங்கள் தேர்வு செய்து நேரடியாக அனுப்ப முடியும்.
இதனால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும், உதாரணமாக இதுவரை நிலப்பதிவிற்கு (pacl land allotment yes) எந்த ஒரு எடிட் ஆப்ஷனை கொடுக்கவில்லை என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது பெறப்பட்டு இருக்கும் இந்த தகவலானது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
ஆகையால் உங்களுடைய புகார் எதுவாக இருப்பினும் அதை நேரடியாக செபி மற்றும் கமிட்டிக்கு அனுப்ப தவறாதீர்கள். மேலும் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்வதன் மூலம் அவர்களுடைய புகாரும் விரைவில் செபியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
தற்போதும் செபி இது சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பது நம்மால் காணமுடிகிறது, ஆகையால் விரைவில் இணையதளம் திறந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.