சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த (paclinvestors.com) தளத்தில் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட விவரங்களை இந்தியா முழுக்கவும் பதிவு செய்து வருகின்றனர்.
கூடிய விரைவில் இந்த தகவல் அனைத்துமே சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வைக்கு எடுத்து செல்ல இருக்கிறது. ஆகையால் இந்த தளத்தில் பதிவுசெய்யாதவர்கள் அனைவரும் தங்கள் PACL விவரங்களை இதில் பதிவு செய்யலாம்.
இந்த தளமானது PACL & PGF INVESTORS-காக தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களால் திறக்கப்பட்டது. இதன் நோக்கம் பிஏசிஎல் பணம் செலுத்திய அனைவருடைய பணத்தையும் மீட்டுத் தருவது ஆகும்.






இந்த தளத்தில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் வெறும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே உங்கள் தகவலை பதிந்தால் போதும். வேறு எந்த ஆவணங்களையும் இதில் பதிய வேண்டாம் என்று அந்த அமைப்பானது குறிப்பிட்டு இருக்கிறது.
இந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான நபர்கள் அனைவரின் நோக்கமும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க பணம் செலுத்திய PACL வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவது.
தற்போது செபியானது பிஏசிஎல் ஒரிஜினல் ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணத்தை திரும்பத் தந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக அக்னாலேஜ்மென்ட், காலாவதியான வங்கி காசோலைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றே இந்த அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.






ஆகையால் இந்தியா முழுக்க உள்ள பிஏசிஎல் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஒன்றுதிரட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு முன் எடுத்துச் சென்று கேள்விகளை கேட்க உள்ளதாக இந்த அமைப்பு முடிவு செய்து உள்ளது.
மிக விரைவில் இந்த தளத்தில் விவரங்களை பதிவு செய்தவர்களின் அனைவரின் பிரச்சனையையும் இந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறது. நீங்கள் விரும்பினால் இந்த தளத்தில் உங்களுடைய பிஏசிஎல் பிரச்சினைகளை பதிவு செய்யக் கூடும்.
இப்படி நீங்கள் பதிவு செய்யும் போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்த இந்த அமைப்பானது உங்களுடைய பணமும் இதில் சிக்கி கொண்டிருப்பதை சுப்ரீம் கோர்ட்டுக்கு உணர்த்தும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஆகையால் PACL பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்வது நல்லது.