PACL தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை..!

பிஏசிஎல் சம்பந்தமாக தமிழக மக்கள் அனைவருமே முதல்வர் புகார்களை அனுப்பி வருகின்றனர். தற்போது சிறிது சிறிதாக புகார் மனுக்கள் விசாரணை துவக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள், அதாவது நீங்கள் புகார்களை அளித்து ஒரு மாதத்துக்குள் உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வரலாம்.

தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை..
pacl refund status

அது போன்று அனைவருக்கும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது அனைவருமே காவல் நிலையத்திற்கு சென்று பிஏசிஎல் பற்றிய தகவலை ஒரு கம்ப்ளைன்ட் எழுதி சமர்ப்பித்துவிட்டு வருகின்றனர்.

இதன்மூலம் விரைவில் ஆக்ஷன் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் இதுவரை முதல்வர் தனிப்பிரிவுக்கு உங்கள் புகார் மனுவை அனுப்ப வில்லை என்றால், தயவுகூர்ந்து உங்கள் புகார் மனுவை அனுப்புங்கள்.

உங்கள் புகார் மனுவை அனுப்பும்போது நீங்கள் படும் துயரத்தை தெளிவாக குறிப்பிட மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது தமிழக மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மேலும் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் விரைவாக ஒரு நல்ல வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் பணத்தை திரும்ப மீட்டெடுப்பதற்கான வேலையை தமிழக அரசு செய்யும் என்ற எண்ணத்திலேயே, PACLலில் முதலீடு செய்த மக்கள் அனைவருமே இந்த புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

மக்கள் செய்த முதலீடுகள் அனைத்துமே நிலங்களாக உள்ளது அனைவருக்கும் தெரியும், இருப்பினும் தமிழக மக்களின் தேவைக்கு அதிகமாகவே தமிழ்நாட்டில் பிஏசிஎல் இடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால் இந்த நிலங்களை கையகப்படுத்தி மக்களின் பணத்தை மீட்டு எடுத்து தருமாறு, பெரும்பாலும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் சென்று கொண்டிருக்கிறது.

எனவே நீங்களும் பிஏசிஎல் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்கள் மனுவை உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிஎம் செல்லுக்கு அனுப்ப முடியும். இதனால் விரைவில் உங்களுக்கு உங்கள் PACL தொகை கிடைக்க வாய்ப்பு அமையும்.

3 thoughts on “PACL தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை..!”

  1. இரண்டு கைகளை தட்டினால் தான் சத்தம் வரும்.ஆதலால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் நம்முடைய பணம் திரும்பி கிடைக்க வழி பிறக்கும்.

    Reply
  2. Good morning sir!I am also worked. In pacl for five years,till the time I meet the customers torchers,so please help all our agent’s,and customers by the way of giving all policy amount to the customers very very soon, Thank you for all telegram group friends!

    Reply

Leave a Comment