PACL-லில் உள்ள.. தமிழ்நாட்டு மக்கள் நிலை..

PACL பணத்தை திரும்பப்பெற உதவநினைக்கும் ஒரு உள்ளத்தின் குமுறல் இது, இதனை சற்று யோசியுங்கள்.

pacl refund list pacl refund status in tamil
pacl refund list

ஐயா

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கின்றோம். ஆனால் விழிதிறந்து பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை என்று என்னும் பொழுது மனம் கணக்கிறது.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இதை உங்களிடம் கேட்கின்றேன். ஒரு பத்து நாட்கள் அனைவருக்கும் நேரம் கொடுங்கள், குறைந்தது அனைத்து PACL குருப்பிலும் குறைந்தபட்சம் 250 பேர் உள்ளார்கள்.

ஒரு ஐம்பது பேராவது அந்த பத்து நாட்களுக்குள் முதலமைச்சர் பிரிவிற்கு தங்களது புகாரை அனுப்பி விட்டார்கள் என்றால், இந்த குழுவை தொடர்ந்து நடத்தலாம்.

மேலும் படியுங்கள்: PACL பற்றி இப்போதே முதல்வரிடம் சொல்லுங்கள்

இல்லை என்றால் இந்த குரூப்பை முழுவதுமாக நீக்கிவிட்டு, அனுப்பிய சில பேர் மட்டும் வைத்து குரூப்பை நடத்திக் கொள்ளலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த குரூப்பில் உள்ளவர்கள் தயவுகூர்ந்து பதில் சொல்லவும். இதை நான் என் அடிமனதில் இருந்து சொல்லவில்லை, அனைவரும் மவுனமாக இருப்பதால் தான் சொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

பொதுவா நீங்கள் PACL சம்மந்தமாக பல கேள்விகளை கேட்க்கிண்றீர்கள் அது நல்லதே, ஒருவேளை உங்களுக்கான கேள்விகளை இது போன்ற குழுக்களின் மட்டும் தான் கேட்க முடியும் ஏனென்றால், பலர் இரவு பகல் பாராமல் நமக்கான பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம். ஒன்றுமே இல்லை. சொல்வதை ஏன் நீங்கள் கேட்பதில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இல்லையென்றால் நீங்களாவது ஒரு யோசனையை சொல்லுங்கள், அதன்படி அது நடக்கலாம்.

எத்தனை பேர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வீர்கள் என்று பார்க்கலாம். நன்றி. உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

PACL பணம்கிடைக்க விரும்பும் ஒருவன்.

8 thoughts on “PACL-லில் உள்ள.. தமிழ்நாட்டு மக்கள் நிலை..”

  1. (1).முதலமைச்சர் தனி பிரிவிற்கு அனுப்பியதற்கு, அங்கிருந்துதான் லோதா committeeயை அணுக செல்லிவிட்டார்களே. எனது வேண்டுகோள், ஒவ்வொருவரும் நேரிடையாக மாண்புமிகு பாரத பிரதமர், மற்றும் மரியாதைக்குரிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஅவர்களுக்கும் இந்த கோரிக்கையை அனுப்புவோம். இதை ஒரே நாளில் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்யவேண்டும். (2) கரூர் மற்றும் அரவக்குறிச்சியை சேர்ந்த pacl வாடிக்கையாளர்கள் அரசியல் சாயம் பூசாமல் BJP தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை அணுகி நமக்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சென்னையில் தலைமை செயலகம் முன்பு இருக்க கேட்டு கொண்டு அதற்க்கு அவர் ஒத்துக்கொண்டால் நமது கோரிக்கை 100% நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனை அவர் நேரிடையாக, PM,உள்துறை,நிதித் துறை அமைச்சர் அவர்களிடமும் மற்றும் லோதா கமிட்டி இடமும் கொண்டு சென்று நமக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவர்.

    Reply

Leave a Comment