ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பவில்லை

பிஏசிஎல் நிறுவனத்தின் மக்கள் பணத்தை செலுத்தி அதை திரும்பப் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர், அதில் 10 முதல் 15 ஆயிரம் வரை பணம் மக்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இருந்தபோதும் தங்களுடைய பணம் செலுத்திய ஆவணங்களை ஆன்லைனில் மக்கள் சமர்ப்பித்தனர், அதேசமயம் அந்த ஒரிஜினல் ஆவணங்களை செபி அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்புமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பித்தவர்களின் மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தியாக (SMS) தகவல் தற்போது பெறப்பட்டு வருகிறது, அவ்வாறு தகவல் வரும் முதலீட்டாளர்கள் தங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை செபி அலுவலகத்திற்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்புவதற்கும் செபி பரிந்துரைக்கிறது.

இதை செய்வது சரியா தவறா என்ற கேள்வி பலர் மனதில் இருந்து கொண்டிருக்கிறது, நாம் நமது ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பவில்லை என்றால் நமக்கு பணம் கிடைக்காது, அவ்வாறு நாம் அனுப்பி விட்டால் நம்மிடம் வேறு எந்த ஒரு ஆதாரமும் இருக்காது என்ற குழப்பம் மக்களிடையே நிலவி கொண்டிருக்கின்றது. இதற்கான ஒரு தீர்வை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க உள்ளோம்.

pacl money sms, pacl bond submitted in tamil

தற்போது பிஏசிஎல் நிறுவனத்தின் செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதற்கு இந்த ஆவணங்களை செபி கட்டாயம் கேட்கும், ஆனால் மக்களின் மனதில் இருக்கும் கேள்வி என்னவென்றால், நாம் ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்த பிறகு மீண்டும் என் ஒரிஜினல் ஆவணங்களை கேட்கிறார்கள் என்று.

அதற்கான பதில் சிபியிடம் தான் உள்ளது, ஒரிஜினல் ஆவணங்களை தர வேண்டாம் என்று சில அமைப்புகள் வலியுறுத்துகிறது, இருந்தபோதும் மக்கள் பலரும் தங்கள் ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பி கொண்டு தான் இருக்கின்றனர், அதுவும் ஒரு சிறந்த வழிதான்.

காரணம் செபியால் மட்டுமே தான் இந்த பணத்தை மக்களுக்கு மீட்டுத்தர முடியும், அதற்கான சில ஆவணங்களை செபி கூறுவது சரியானதே, இருந்தபொதும் மக்கள் தங்களுடைய ஆவணங்களை அனைத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் அனுப்புமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.

அவ்வாறு அனுப்பப்பட்ட பின் மக்களின் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, அதேசமயம் முதலீட்டாளர்களின் தொகையை முழுமையாகவும் பெறப்படவில்லை என்றும் சில குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஒவ்வொரு நபர்களுக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி (SMS) பெறப்பட்டு வருகிறது.

pacl refund sebi

எனவே நீங்கள் பதிவு செய்யும் போது எந்த மொபைல் நம்பரை கொடுத்தீர்களோ அந்த மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வருகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான சேவையையும் செபி தனது வலைத்தளத்தில் கொடுத்துள்ளது.

இந்த விஷயத்தில் செபி கொரோனா காலகட்டத்திலும் செபி தனது வேலையை சிறப்பாக செய்து வந்தது, ஆகையால் அனைவரும் செபியின் மேல் நம்பிக்கை வைத்து தங்கள் ஆவணங்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இருந்த போதும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தை இதில் செலுத்தி இருப்பதால், ஆவணங்களை அனுப்புவதும் தாமதிப்பதும், அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் அமைகின்றது, யாரையும் கட்டாயப்படுத்த முடியாது சூழ்நிலைதான் தற்போது வரை நிலவுகிறது என்பது உண்மை.

இதில் உங்களுடைய கருத்து என்ன என்பதை நீங்கள் கீழே கருத்து பெட்டியில் பகிருங்கள், அதோடு இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

11 thoughts on “ஒரிஜினல் ஆவணங்களை அனுப்பவில்லை”

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் உங்களின் பதிவை பார்த்தேன் சந்தோஷம்

    Reply
  2. Land allotment received ‘yes’ கொடுத்தவர்களில் பலர் 15000 ரூபாயும் அதற்கு குறைவான தொகை கட்டியவர்களும் உள்ளனர்.இவர்களுக்கு செபி சொந்த உறுதிமொழியினை பெற்றுக்கொண்டு பணம் கொடுக்கலாமே. ஆவன செய்யுங்கள். Kindly brought the attention of Nodal officer about this matter.

    Reply
    • நானும் இதை தான் சொல்ல வருகிறேன், எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த புரிதல் இல்லாமல் land allotment க்கு yes கொடுத்து அதனை திருத்த முடியாமல் தவிர்த்து வருகின்றனர்….

      Reply
  3. Sir sms varavillai but 1rupee credit aagiduku. Search panni paarkum pothu original certificate anuppa sollranga. Anupalaama vendama..

    Reply
  4. K ponni pacl cer.No:u322043813 avar 16.10.21 expird, death certificate eruckirathu, but avar senior pension vankiyathaal bank acoount closed. avar bank amount avar sister daughter vijaya AR got it. both are lived one house, so vijaya was married, so, sepreate ration card, aathar,pancard kept. varisu certificate can’t have. paid Rs.9600/- How can will get this K ponni Policy amount. so pls tell me my Mail id:vijayaarapattnam@gmail.com

    Reply
  5. Dear Sibi team
    when you completed the all member Aumont most of the pepoles already all document still not received any SMS and information

    Reply

Leave a Comment