நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோஷமான தகவல்

PACL: பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோஷமான தகவல் வெளியாகி உள்ளது. (pacl good news on sebi) இந்த தகவலானது சிபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது பிஏசிஎல் சொத்துக்களை விற்றால் மட்டுமே பிஏசிஎல் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தர முடியும். இந்த விஷயத்தில் லோதா கமிட்டி மற்றும் சிபி ஈடுபட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் பிப்ரவரி 2, 2016 ஆம் தேதியன்று கமிட்டி அமைக்கப்பட்டு சொத்துக்களை விற்கும் வேலையில் இறங்கியது. இருப்பினும் பல இடையூறுகள் காரணமாக சொத்துகளை விற்க முடியாத சூழ்நிலை நிலவியது.

சில தொகைகள் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருந்தாலும், சிபியின் கைவசம் தற்போது பணம் இல்லை என்பதே உண்மையான விஷயம்.

அந்த வகையில் சொத்துக்களை ஏலம் கேட்க பல நிறுவனங்கள் முன்வந்த போதும் அவர்கள் அதிக கால அவகாசம் கேட்டதால் சிபி அதனை நிராகரித்தது. மேலும் பல கடுமையான நிபந்தனைகளையும் சிபி நிர்ணயித்தது.

இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் இந்த சொத்துக்களை வாங்க முன் வரவில்லை. காரணம் இந்த சொத்துக்களை வாங்கும் அளவிற்கு உள்ள நிறுவனங்களின் தகுதியை சிபி ஆராய்ந்து என்றே குறிப்பிடலாம்.

ஆனால் தற்போது பார்க்க இருக்கும் அந்த சந்தோஷமான தகவல் (pacl good news on sebi) என்னவென்றால் தற்போது 2 ஏல கேள்விகள் வந்துள்ளது. அதில் குறிப்பாக 17 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 703 ரூபாய்க்கு ஒரு ஏலக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பல வருடங்களாக செபி என்னசெய்தது? பதிலளித்த கமிட்டி

pacl good news on sebi

இந்தக் கேள்வியானது 18 பிப்ரவரி 2021 அன்று சிபியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், இவர்கள் கேட்டிருக்கும் இந்த தொகையானது இரண்டு மாதங்களுக்குள் சிபியிடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதாவது முதல் 10 நாட்களுக்குள் 25% தொகையை ஒப்படைத்ததாகவும், மீதி 45 நாட்களுக்குள் மொத்த தொகையும் ஒப்படைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக இரண்டு மாதங்களுக்குள் மொத்த தொகையும் வழங்க தயாராக உள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை பெரும்பாலும் ஏலம் கேட்ட நிறுவனங்கள் அனைத்துமே மூன்று அல்லது நான்கு வருடங்கள் பணத்தை செலுத்த அவகாசம் கேட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் இந்த கேள்வி 17 கோடியாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்குள் பணத்தை ஒப்படைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஆகையால் இதை நிச்சயம் சிபி ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு நிறுவனம் ஏலம் கேட்டுள்ளது அந்த ஏலம் கேட்ட நிறுவனம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அதனுடன் இணைத்து அனுப்பியுள்ளது.

PACL LATEST TAMIL NEWS

இந்த தகவல்கள் அனைத்துமே கீழே உள்ள பிடிஎப் (PDF) வகையில் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

இந்த தகவலானது மிக நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கப்படும் சொத்து சம்பந்தப்பட்ட ஒரு நல்ல தகவலாகும், அதேசமயம் குறுகிய காலத்தில் பணம் கிடைக்க வாய்ப்பாக அமையும் ஒரு சந்தோஷமான செய்தியாகும்.

ஆகையால் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் இந்த கேள்வியை ஒப்புக்கொண்டாள் அடுத்த பெரிய அளவிலான தொகையையும் மக்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 thought on “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோஷமான தகவல்”

Leave a Comment