PACL-லில் இழந்த பணத்தை மீட்டுத்தருவோம் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் வாக்குறுதி

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் பிஏசிஎல் இழந்த பணத்தை நாங்கள் மீட்டுத்தருவோம் என்று திமுக எம்.பி கனிமொழி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

அவர் சமீபத்தில் பேசிய தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஏசிஎல் என்ற நிறுவனத்தில் மக்களுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் காலதாமதம் செய்வதோடு பலரின் வாழ்வாதாரம் ஆனது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மக்களின் மத்தியில் வாக்களித்தார்.

Also Read: தேர்தல் வாக்குதியில் PACL பிரச்சனை இதனால் நமக்கு என்ன பலன்?

pacl kanimozhi mp
pacl dmk news

பிஏசிஎல் என்ற நிறுவனமானது பஞ்சாப் மாநிலத்தை முதல் இடமாக கொண்ட இந்தியா முழுக்க பணத்தை வசூல் செய்தது. தற்போது அது செபி மற்றும் லோதா கமிட்டியின் அடிப்படையில் மக்களுக்கு பணம் சென்றடைவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

இருப்பினும் மாநில வாரியாக பல மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு பணத்தை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இது சம்பந்தமாக பல இடங்களில் மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

sebi office strike on pacl customers
sebi office strike on pacl customers

தற்போது தேர்தல் சமயம் என்பதால் தலைவர்களை சந்திக்கும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் கூறுகின்றனர்.

அதனடிப்படையில் திமுக எம்.பி கனிமொழி அவர்களை சந்தித்த PACL சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வேதனையை அவர்களிடம் கூறினர். அவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து மக்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

Also Read: செபியின் முதல் PACL அறிவிப்பு

PACL சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களிடமும் பிஏசிஎல் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மக்கள் பிரச்சனையை நிச்சயம் தீர்த்து வைப்போம் என்று திமுக எம்.பி கனிமொழி அவர்கள் மக்கள் மத்தியில் அரசியல் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2 thoughts on “PACL-லில் இழந்த பணத்தை மீட்டுத்தருவோம் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் வாக்குறுதி”

  1. சொன்னபடி செய்ய வேண்டும்.ஒவ்வொரு PACL வாடிக்கையாளர்களின் நன்றிி உங்களை வந்தடையும்.

    Reply

Leave a Comment