பிஏசிஎல் விவகாரத்தில் மக்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதற்கு திறக்கப்பட்ட செபியின் இணையத்தளமானது, தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது இந்த இணையதளம் சீரமைப்பு செய்து வருவதாகவும் அதனால் அடுத்த அறிவிப்பு காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் பணம் செலுத்திய ஒரிஜினல் ஆவணங்களை பதிவு செய்யக்கோரி செபி ஆணையிட்டது. இதன் அடிப்படையில் அனைவரும் பதிவு செய்தனர்.
பதிவு செய்தவர்கள் பணம் பெற்றனர், ஒரு சில தவறுகள் செய்தவர்களுக்கான திருத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. இது படிப்படியாக அலிக்கப்பட்டு தற்போது 31-ஆம் தேதி யோடு இந்த இணையத்தளமானது முடக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் என்ன வேலைகள் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு தான் இது:
பிஏசிஎல் (ல்) செலுத்திய பணத்தை மக்கள் இந்தியா முழுக்க திரும்பப் பெறுவதற்கு ஒரே வழி என்னவென்றால் இந்த இணையதளம் மட்டுமே ஆகும்.
இந்த இணையதளத்தின் மூலமாக மட்டுமே நாடு முழுக்க பணம் செலுத்திய மக்கள் அனைவரும் தங்கள் பணத்தை திரும்ப பெற முடியும். செபி மற்றும் லோதா சம்மிட்டியை அணுகுவதற்கான வாய்ப்பும் இதில் மட்டுமே கிடைக்கும்.
இதில் சில மாற்றங்களை அடிக்கடி சிபி மற்றும் தோத்தா கமிட்டி இணைந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது 10 ஆயிரம் வரை திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய கமிட்டி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது.
அது முடிந்த பிறகு தற்போது இந்த இணையதளத்தை முடக்கி வைத்திருக்கிறது. இதற்கு பின்னணியில் நடக்கும் வேலைகள் என்னவென்றால்?
அடுத்தகட்டமாக எவ்வளவு ரூபாய் மக்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என்ற நடவடிக்கைகளோடு அதில் எவ்வளவு தவறுகள் இருக்கின்றது, எவ்வளவு பேர் சரியான ஆவணங்களை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது பற்றிய பரிசீலனை நடைபெறும்.
அதுமட்டுமில்லாமல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டவர்களின் விவரங்களை திருத்துவதற்கான வேலையும் நடைபெறும்.
விரைவில் இந்த இணையத்தளமானது மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கட்ட பண பரிவர்த்தனை காண வேலைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் இதே போல் சில நாட்கள் இணையதளத்தை முடக்கி வைத்து வேலைகளை சீரமைத்து பின்னர் இணையதளம் திறக்கப்பட்டது.
அந்த வழியிலேயே தற்போதும் இந்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது, ஆகையால் PACL-லில் பணம் செலுத்திய வாடிக்கையாளர் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும் இந்த இணையதளத்தின் அடுத்த அறிவிப்புக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஏனென்றால் விரைவில் மக்களின் பணம் கிடைக்கப்பெற்றால் அனைவருடைய பிரச்சனையும் தீரும் என்பதே இதற்கு முக்கியமான காரணம்.
வயதானவர்கள் நிறைய பேர் இருப்பதால் அவர்கள் இறப்பதற்கு முன்னதாக பணத்தை பெறுவதற்கு ஏதுவாக செபி மற்றும் லோதா கமிட்டி இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் மக்களில் பெரும்பாலானோர் கோரிக்கையில் ஒன்றாக இருக்கிறது.
இவை அனைத்துமே பல வழிகளில் புகார்களாக சிபி மற்றும் லோதா கமிட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அடுத்த அறிவிப்பு இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சிபி மற்றும் லோதா கமிட்டி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.