PACL-லில் தற்போது ஒருசிலருக்கு 20,000ம் வரை தங்களின் பதிவின் தவறுகளை திருத்த வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இதுவரைக்கும் 10,000ம் வரை வழங்கப்பட்ட இந்த வாய்ப்பானது, 20,000ம் வரை வழங்கப்படுகிறது,
இதன் அர்த்தம் விரைவில் 20,000ம் மற்றும் அதற்க்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருகிறது.
அதோடு நிறைய நபர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் 1ரூபாய் வரவுவாய்க்கப்பட்டுவருகிறது.






இது வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்கில் மொத்த தொகையை செலுத்துமுன் வங்கிக்கணக்கு நிலுவையில் உள்ளதா என்று சரிபார்க்க செலுத்தும் தொகையாகும்.
இதுவும் தற்போது நிறைய நபர்களுக்கு வந்துட்டுக்கொண்டிருக்கிறது, ஆகையால் மிக விரைவில் அடுத்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்திலும் செபி மக்களின் PACL பதிவினை கொண்டு அவர்களது பணத்தை அவர்களின் வங்கியில் செலுத்தியது.






தற்போது உள்ள இத்தகாலகட்டத்திலும் செபி யானானது கடமையை நாற்றாக செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சிலதினங்களுக்குமுன் PACL சொத்துக்களின் விற்பனை பற்றிய அறிவிப்பு, அந்த அறிவிப்பானது மிக சிறப்பான ஒரு அறிவிப்பாகும்,
இதுபோல் நல்ல ஏல கேள்விகள் வரத்துவங்கினாள் மிகவிரைவில் செபி அனைத்து PACL சொத்துக்களையும் விற்று விரைவாக பணத்தை மக்களிடம் ஒப்படைக்கும்.
எனவே உங்களின் தொகையானது 20,000ம் ரூபாயாக இருந்தால் உங்களின் பதிவை தற்போது நீங்கள் பார்த்தல் அவசியமாகும்.
ஒருவேளை அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை சுலபமாக நீங்கள் இப்போதே சரிசெய்ய வாய்ப்புகள் கிட்டும்.
செபி அடுத்த அறிவிப்பு வரும்போது எந்த தடையும் இன்றி உங்களின் பணமானது உங்களின் வங்கியில் செலுத்தப்படும்.
இதில் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டில்தான் பலருக்கும் இதுபோன்ற தகவல்கள் முன்பே தெரிவதில்லை,
காரணம் என்னவென்றால், தகவல்கள் அனய்த்துமே ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில்தான் அதிகம் கிடக்கிறது.
ஆகையால் தமிழ்நாட்டு மக்கள் நலம்பெற இதனை அனைவருக்கும் பகிருங்கள்.