PACL களப்பணியாளர்கள் (ஏஜென்ட்) மீது வழக்கு இல்லை

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும், முதலீடு செய்ய காரணமாக இருந்த PACL களப்பணியாளர்கள் (ஏஜென்ட்) மீது பலவிதமான தாக்குதலை நிகழ்த்தி வருவதாக, சமீப காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மறியல் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு காவல்துறை அதிகாரி அவர்கள் இது பற்றி என்ன கூறினார் என்பது பற்றிய தகவலை இந்த இணையதள கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இதன் மூலம் PACL முதலீடு செய்தவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் (ஏஜென்ட்) அனைவருக்கும் நல்ல தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வலைதள கட்டுரையை கவனமாக படியுங்கள்.

pacl refund registration 2021

இந்தியா முழுவதும் PACL

சமீபத்தில் மட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பிஏசிஎல் சம்பந்தப்பட்ட போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும், சென்னையில் அவ்வப்போது இந்த போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ள நிலையில், சமீபத்தில் இந்த போராட்டத்தை பிஏசிஎல் களப்பணியாளர்கள் மேற்கொண்டனர்.

PACL today tamil news

தமிழக காவல் துறை

அவர்களிடம் பேசிய மாண்புமிகு தமிழக காவல் துறை அதிகாரி அவர்கள், பிஏசிஎல் நிறுவனம் செபியால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது முடக்கப்பட்டு இருப்பதாகவும், இது சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களையும் செபி கையகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதாகவும், இந்த சொத்துக்கள் அனைத்தையும் கூடிய விரைவில் விற்று மக்களின் பணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது இந்த வேலையை செய்வதற்காகவும், ஓய்வு பெற்ற நீதிபதியான திரு லோதா அவர்களை நியமித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

PACL CASE
pacl latest news in tamil 2021 today

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு

அதோடு இது சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு என்பதால், செபி இதில் தலையிட்டு இருப்பதாலும், எந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனிலும் பிஏசிஎல் களப்பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும், காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்தாள், இந்த வழக்கு செபி கையில் உள்ளது, ஆகையால் நாங்கள் தற்போது இந்த விசாரணைக்கு வர முடியாது செபியின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று நீங்கள் கூறலாம் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

பணம் செலுத்திய மக்கள்

இதன் மூலம் தெரிய வரும் விஷயம் என்னவென்றால், பிஏசிஎல் விஷயத்தில் பணம் செலுத்திய மக்களின் பணம் அனைத்தும் திரும்பப் பெறுவதற்கான வேலை நடந்து கொண்டிருப்பதும், அதேசமயம் மக்களுக்கு தரவேண்டிய அளவிலான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு இருப்பதும், இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதும் ஊர்ஜிதமாகிறது.

மோதலில் ஈடுபடவேண்டாம்

ஆகையால் இதனால் அறிவுறுத்தப் பட்டது என்னவென்றால்? பிஎசிஎல் களப் பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் இது சம்பந்தமாக எந்தவித மோதலும் ஈடுபட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் இது பற்றிய நல்ல தகவல் வரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், சிறிது காலம் பொறுத்திருப்பது அவசியமாக படுகிறது. உதாரணமாக, இது கொரோனா காலம் என்பதால் இது மேலும் தாமதம் ஆகி இருக்கக் கூடும் என்றும் பலரால் பேசப்பட்டு வருகிறது.

அதிகாரபூர்வ இணையத்தளம்sebipaclrefund.co.in
செபியின் PACL தகவல்PACL Matter

6 thoughts on “PACL களப்பணியாளர்கள் (ஏஜென்ட்) மீது வழக்கு இல்லை”

  1. சகோதரர் மோகன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் இந்த உதவி அனைத்து PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வரபிரசாதம் ஆகும். உங்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    Reply
  2. We already surrended document to pacl agent so we dont have any proof to submit in online pls let me know any idea how get money

    Reply
  3. எப்ப சார் கிடைக்கும் , ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார் முடிந்தவரை சிகிரம் பணத்தை வங்கி கணக்கு செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்

    Reply

Leave a Comment