PACL பற்றி தமிழக அரசின் கருத்து..!

PACL விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே எந்த ஒரு தகவலும் வரவில்லை என்ற விஷயம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும், இருப்பினும் தமிழ்நாடு தரப்பிலிருந்து PACL சம்பந்தமாக என்ன தகவல் வழங்கப்பட்டது என்பதை தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்.

தமிழக அரசு இதுபற்றி என்ன கூறியது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்த இணையதள கட்டுரையை கவனமாக படியுங்கள். மேலும், இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவலுக்கு செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம், அதற்கான வாய்ப்பும் உங்களுக்கு எங்கள் இந்த கட்டுரையை வழங்கப்படும்.

tamil news on pacl

இந்தியா முழுவதும் கிளைகளை

PACL நிறுவனமானது இந்தியா முழுவதும் கிளைகளை துவங்கி, மக்களிடம் பணத்தை வசூல் செய்தது, இதை சதுப்பு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதோடு பலவிதமான அடிப்படையில் மக்களிடம் பணம் வசூல் செய்து மக்களுக்கு ஐந்து வருடங்கள் முதல் பல வருடங்களுக்கு இது சேமிப்பு கணக்கில் அனுமதிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில், இந்த நிறுவனம் 2014 ஆண்டு சிபிஐ-யால் முடிக்கப்பட்டது, அதன்பிறகு நிதிமோசடி வழக்கில் இந்த பிஏசிஎல் நிறுவனம் மூடப்பட்டது, அதன் பிறகு இதில் பணம் செலுத்திய மக்களின் தொகை சுமார் 42,000 கோடி இந்த நிறுவனத்தில் சிக்கிக்கொண்டது.

அப்போது இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடி ஆகவும் இது அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த பணத்தை அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் அரசாங்கம் அதிக அளவில் ஆர்வம் காட்டியது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதில் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்தாலும், அவை எல்லாம் சிறிய அளவில் தொகை என்பதால், பெரிய அளவு பணம் செலுத்தியவர்கள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க வில்லை. ஆகையால், பலரும் இதில் வேதனை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் பலவிதமான போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என்று அனைத்து மாநிலங்களிலும் நடந்த நிலையில், தமிழகத்திலும் இது சூடுபிடிக்க துவங்கியது. கடந்த வருடம் சென்னையில் உள்ள சிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட PACL முதலீட்டாளர்கள், தங்கள் கோரிக்கையை வைத்தனர்.

மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு

அப்போது லோதா கமிட்டியை சந்திக்க சிபி மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது, அங்கும் சென்று தமிழக மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பின்னர், திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற பிறகு, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் மக்களின் குறைகளை பதிவு செய்யுமாறு கூறினார்.

இதனடிப்படையில் பிஏசிஎல் பணம் செலுத்திய மக்கள் அனைவருமே தங்களின் குறைகளை, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர். அதன் பிறகு பலருக்கும் மொபைல் மூலம் அழைப்பு வந்தது.

தமிழக அரசின் செய்தி

today news

PACL சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு தற்போது உள்ள தகவலின் படி தமிழக அரசின் தரப்பிலிருந்து கூறப்பட்ட செய்தி என்னவென்றால், இந்த நிறுவனத்தில் 2014ம் ஆண்டு மூடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், மேற்படி கம்பெனி சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் மனுதாரர் கட்டிய பணத்தை பெறுவதற்காக ஆன்லைனில் பதிவு செய்யலாம், தேவைப்பட்டால் தங்கள் சார்பில் வழக்கறிஞர் மூலமாக டெல்லி சிபிஐ அலுவலகத்தை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சிறுகச்சிறுக அனைவருக்கும் வந்து கொண்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு சென்றது, அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி லோதா அவர்களின் கீழ் ஒரு குழு அமைத்து, மக்களிடம் வசூல் செய்த பணத்தை அனைத்தையும், பிஎசிஎல் நிலங்களை கையகப்படுத்தி, அதில் இருக்கும் அசையும் சொத்து, அசையா சொத்து அனைத்தையும் விற்று மக்களின் பணத்தை மக்களுக்கு கொடுக்குமாறு அறிவுறுத்தியது.

Sebi.gov.inClick Here
PACL Bond SubmitClick Here
OnlinePaclRefund HomePACL News Site

2 thoughts on “PACL பற்றி தமிழக அரசின் கருத்து..!”

  1. I am pacl agent. I have many policy. I take the company business total amount30lacks.but costomers not recived money.last 7 years no return money .This problem how can solved.this amount clim people when.

    Reply

Leave a Comment