PACL சாமிப்பதிய செய்தி [போராட்டத்தில் முடிவுகள்]

பிஏசிஎல் இல் முதலீடு செய்த பணத்தை மீட்பதற்காக மக்கள் இந்தியா முழுவதும், பல மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் அமைதியாக இருந்ததனர். அது தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இன்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வரை சந்தித்து பிஏசிஎல் முதலீட்டாளர்கள் களப்பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர், அந்த கோரிக்கையானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய கூடுதல் தகவல்களை தமிழ் மொழியில் வழங்குவதற்கு இந்த இணையத்தள கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இதை தெளிவாக தெரிந்து கொள்ள எங்கள் வலைதள கட்டுரையை கவனமாக படியுங்கள்.

PACL Recent News

5 ஆண்டுகள் கமிட்டி தாமதம்

PACL நிறுவனம் முடக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது குறைந்த அளவிலான தொகை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு கொடுக்கும் வேலை நடந்துகொண்டு வருகிறது. இருந்தபோதும், அதிக அளவிலான தொகை இன்னும் நிலுவையில் உள்ளதால் இந்த வேலையை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் சிபி மற்றும் லோதா கமிட்டி தாமதம் படுத்துவதாக அதிக நபர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உத்தர பிரதேசம்

அந்த வகையில் உத்தர பிரதேச மாநில முதலீட்டாளர்களும் மத்திய பிரதேச மாநில முதலீட்டாளர்களும் தங்கள் கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளனர். அதாவது பிஏசிஎல் நிறுவனம் முதலீடு செய்த அனைத்து பணத்தையும் பெரும்பாலான அளவில் நிலங்களை வாங்கி வைத்துள்ளது. அந்த நிறுவனம் தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விற்றால் மட்டுமே மக்களுக்கு மக்கள் பணத்தை திரும்ப தர முடியும் என்பது உண்மை, இருந்தபோதும் இந்த நிலங்கள் அணைத்து மாநிலத்திலும் உள்ளது.

மாநில அரசே முன்வந்து

PACL நிலங்களை அந்தந்த மாநில சொத்துக்களை அந்தந்த மாநில அரசே முன்வந்து விற்று மக்கள் பணத்தை திரும்பத் தருமாறும், சிபியிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கும் போது அது அதிக அளவு காலதாமதம் நடத்துவதாகவும் PACL முதலீட்டாளர்களும் தங்கள் கோரிக்கைமூலமாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆகையால் உத்தர பிரதேச மாநில சொத்துகளை, உத்தர பிரதேச அரசுகையிலெடுத்து விற்று அந்த பணத்தை மக்களுக்கு தரவேண்டும் என்று, அம்மாநில மக்கள் அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உத்தர பிரதேசத்தில் பிஏசிஎல் சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருக்கின்றனர்.

முதல்வர் கருத்து

அதிக அளவு மக்கள் ஒன்று திரண்டு இந்த பிரச்சனையை இன்று துவங்கி வெற்றிகரமாக முடித்துள்ளனர். மத்தியபிரதேசம் முதல்வரை சந்திக்க செல்லும்போது அனைவரையும் தடுத்து நிறுத்தப்பட்டு, நான்கு நபர்களை மட்டும் முதல்வரிடம் பேசுவதற்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த நான்கு நபர்களும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் முதல்வருக்கு எடுத்துரைத்ததன் பெயரில், முதல்வர் விரைவில் இதற்கு மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக அந்த நபர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் முதல்வரிடம் சந்தித்து பேசியபோது PACL முதலீட்டாளர்கள் கூறியதாவது, பல நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நாங்கள் கேட்டு ஏமாந்து இருக்கிறோம் ஆகையால் இம்முறை தயவுகூர்ந்து ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் தமிழ்நாட்டிலும் இது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கலாம் என்று பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

PACL அதிகாரப்பூர்வ இணையதளம்PACL
PACL இணையதளத்தின் முகப்பு பகுதிPACL Home

Show English Text

Leave a Comment