செபி அலுவலக காத்திருப்பு போராட்டம் நிபந்தனை என்ன?

PACL SEBI: வரும் 03.02.2021 புதன் காலை 10 மணிக்கு செபி அலுவலகம் முன்பு நடக்கவிருக்கும் முக்கிய ப்ரொராட்ட நிபந்தனைகள் PACL வாடிக்கையாளர்கள் அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது. அவற்றைப்பற்றி விரிவாகப்பார்ப்போம்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின் அங்கீகாரத்தோடு PACL என்ற நிறுவனம் 1956 கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்திய நாடு முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது.

pacl today latest refund news in tamil
sebi pacl refund new update

இந்த நிறுவனத்தில் நாடு முழுவதும் 6 கோடிக்கு மேற்பட்ட சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளாக பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம் முதிர்ச்சி தொகையை வழங்காமல் நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளை மூடிவிட்டனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் 2.2.2016 ல் வழங்கிய தீர்ப்பில் கம்பெனி நிலம் மற்றும் சொத்துக்களை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கிட உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்க: மண்டல அளவில் PACL சேவை மையம்

மேலும் நீதிபதி R.M. லோதா ( ஓய்வு ) தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு இப்பணிகளை செய்ய பணித்தது. 4 வருடங்கள் ஆகியும் இன்றைய தேதி வரையிலும் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு பணம் வழங்கப்படவில்லை.

பல்வேறு நிபந்தனைகளையும் சாத்தியமற்ற பல கட்டுபாடுகளை விதித்து மக்களை அலைக்கழிக்க செய்கிறது. இப்பின்னணியில் கடந்த 25.7.2019 அன்று சென்னை செபி (SEBI) அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதையொட்டி செபி அலுவலகம் கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இதில் பதிவு செய்யாதவர்கள்:

  • ஒரிஜினல் பாண்டு வைத்திருப்போர்
  • பாண்டு தொலைந்தது
  • PACL அலுவலகம் நடந்த போது பாண்டு கொடுத்து ஒப்புகை சீட்டு வாங்கியது
  • இறப்பு சான்றிதழ்
  • வாரிசு சான்றிதழ் உள்ள நபர்களின் பாண்டு பதிவு செய்யாமல் இருப்பது
  • பாண்டு மீது கடன் பெற்றது
  • காசோலை காலவதியானது
  • ஒப்புகை சீட்டு பெற்று அனைத்து ரசீதுகள் கேட்டு இரசீது இல்லாமல் பதிவு செய்யாமல் இருப்பது
  • பதிவு செய்யும் போது Certificate Error என்று வருவது
  • லேண்ட் ஆலாட்மேண்ட்

மேற்கண்ட அனைத்து முதலீட்டாளர்களின் ஆவணங்கள், நீதியரசர் R.M. லோதா (ஓய்வு) அவர்களிடம் உள்ள நிலையில் தேவையற்ற நிபந்தனைகளை விதித்து முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் போக்கை கைவிட்டு மேற்கண்ட ஆவணங்கள் அடிப்படையாகக் கொண்டு Online- ல் விண்ணப்பிக்க முடியாத முதலீட்டாளர்களிடம் மண்டல அளவில் அலுவலகம் அமைத்து அவரவர்களிடம் இருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் தாங்கள் நேரடியாக விண்ணப்பத்தை பெற வேண்டும்.

இதன் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வு காண மேற்கண்ட நியாயமா மான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை செபி (SEBI) அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. பெருந்திரளாக முதலீட்டாளர்களும், களப்பணியாளர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . அனைவரும் பங்கேற்பீர்!

இவ்வாறு போராட்டக்குழுவானது அறிவித்துள்ளது. இதற்க்கு ஆதரவு இருப்பின் நீங்கள் இத்தகவலை பகிரலாம்.

Leave a Comment