PACL விவகாரத்தில், இந்தியாவில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வடமாநில முதலீட்டாளர்கள் அனைவரும் சேர்ந்து 20ஆம் தேதி லக்னோவில் ஒரு முக்கிய விஷயத்தை நிகழ்த்த உள்ளனர், அது பற்றிய விரிவான தகவலை தான் இன்று பார்க்கப் போகிறோம். இதன் மூலம் நல்ல திருப்பம் ஏற்படும் என்றும் அவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
விகாஸ் திருப்பாட்டி
இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது விகாஸ் திருப்பாட்டி, இவர் PACL நிறுவனத்தில் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த முயற்சியை எடுத்து வருகிறார். தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், அதில் அவர் குறிப்பிட்டதாவது பிஏசிஎல் நிறுவனம் சொத்துக்களை பிஏசிஎல் நிறுவனமே ஒப்படைத்தல், மக்களுக்கு பணத்தை விரைவாக கொடுக்க முடியும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவானது இந்த விஷயத்தில் தாமதம் மற்றும் அலட்சியம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஆகையால் பிஎசிஎல் சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துக்களையும் பிஏசிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும், நிறுவனம் மட்டுமே விரைவில் மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்க வழுவகுக்கும் என்றார், இதை நாம் தற்போது வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார், இதற்காக ஒரு முக்கிய கூட்டத்தையும் அவர் லக்னோவில் ஏற்பாடு செய்திருக்கிறார்.
லக்னோவில் போராட்டம்
இந்த அறிவிப்பின் மூலம், பிஏசிஎல் முதலீட்டாளர் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும் லக்னோவில் உள்ள செபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர், இதன்மூலம் தங்கள் கோரிக்கையை அவர்கள் தெரிவிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் இந்தியா முழுவதும் உள்ளது, இந்தியா முழுவதும் பிஏசிஎல் நிறுவனம் தங்கள் கிளைகளை துவங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கும் என்றும், சிபி இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் குற்றம் சாட்டி இந்த லக்னோ போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
PACL அலுவலகம்
இந்த பிஏசிஎல் நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தை முதல் இடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தங்களது கிளையை திறந்து மக்களது பணத்தை வசூல் செய்து, சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்தது. சிபியின் முக்கிய நடவடிக்கையால் இந்த நிறுவனம் முடக்கப்பட்டு தற்போது ஐந்து ஆண்டுகள் நடந்துவருகிறது.
இருந்தபோதும், அந்தந்த மாநிலத்தில் இயங்கிவந்த பிஏசிஎல் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது, ஆகையால் இந்த நிறுவனத்தின் கிளைகள் திரும்பவும் திறக்கப்பட்டால் மட்டுமே மக்களின் பணத்தை சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய வழிவகுக்கும் முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
ஆகையால், அந்தந்த மாநிலத்திலும் கிளைகளைத் திறந்து மக்களின் பணத்தை திருப்பி அளிக்கக் கூடிய வாய்ப்பை PACL நிறுவனத்திடமே வழங்கியிருந்தால், இத்தனை ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள், ஆகையால் தற்போது இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார் கள்.
PACL தற்போதைய நிலை
PACL நிறுவனத்தில் மக்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்காக செபி மற்றும் லோதா கமிட்டி இணைந்து ஒரு இணைய தளத்தை உருவாக்கியது, அதில், பிஏசிஎல் முதலீட்டாளர்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை பதிவேற்ற கூறியது, அந்த ஆவணத்தின் அடிப்படையில் மக்கள் பணத்தை வங்கியில் வரவு வைத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கையில் உள்ள ஆவணங்களை மட்டுமே மக்களால் பதிவு செய்ய முடிந்தது, பதிவு செய்த ஆவணத்திற்கு மட்டுமே பணமும் பெறப்பட்டது. இந்த நிறுவனம் முடக்கப்பட்டு சுமார் 3 முதல் 4 வருடங்கள் ஆனதால் நிறைய ஆவணங்கள் மக்கள் கையில் இல்லாத காரணத்தினால், தங்களது பணத்தை முழுமையாக பெற முடியவில்லை.
மேலும் தற்போது வரை பத்தாயிரம் வரை பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே தங்களது பணமானது வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், பல குளறுபடிகள் இருப்பதால் மக்கள் இன்னும் தங்களது பணத்தை தரவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகையால் இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க கோரி இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்எல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இது போன்ற பல போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிறுவனத்திடம் மக்களின் பணத்தை திருப்பி அளிக்க கூடிய அளவிற்கு சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
What happened Aknoldgement
Please take immediate steps to refund customer Pacl amount.
Please do immediately.
They believe our Tamilnadu Government only.
I’m pretty sure you misspelled the word “dont” on your site. You might want to check out a site like SpellRadar.com or SiteCheck.com which have helped me with problems like this in the past.